பக்கம்:உலகு உய்ய.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

றன. அதற்கு உரிய காரணம் அவற்றின் உடலமைப்பே யாகும். மக்களினம் மட்டும் காலத்துக்குக் காலம் முன் னேறிக்கொண்டிருப்பதற் குரிய காரணம், நெட்ட நெடுக நிற்கும் நிலையிலும் தொழில் செய்யும் முறையிலும் கை கால்கள் பொருந்திய உடல் அமைப்புடன் பகுத்தறி வும் பெற்றிருப்பதே யாகும். எனவே, உலக உயிர்கள் உய்வதற்கு உரிய வழிதுறைகளாகக் கூறப்பட இருப்பவை மக்களினத்திற்கே யாம். மக்கள் அவற்றைக் கடைப் பிடித்துத் தாமும் உய்ந்து அஃறிணை உயிர்களையும் உய் விக்கலாம்.

உய்யும் வழி துறைகள்:

மந்திரத்தால் மாங்காய் விழாது. ஊழ் வினையை நம்பி வறிதே சோம்பி யிருப்பின் வாழவியலாது. நன்கு எண்ணித் துணிந்து, செய்யக் கூடாதனவற்றை விலக்கி, செய்ய வேண்டியவற்றை ஆய்ந்து தேர்ந்து செயலில் இறங்க வேண்டும். வாழ்க்கையில் எவ்வெவற்றை விலக்கி எவ்வெவற்றைப் பின்பற்றிச் செயலாற்றின் உலகு உய்யும் என்பதற்குரிய வழி துறைகள் அடுத்து வரும் தலைப்புக் களில் ஆய்ந்து விரிவாக விளக்கப் பெற்றுள்ளன. இனி அவற்றைக் காண்போமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/19&oldid=544677" இலிருந்து மீள்விக்கப்பட்டது