பக்கம்:உலகு உய்ய.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190

அரசு அலுவலர்க்கு ஏதாவது வெல்லம் தடவிச் சுவை காட்டியிருக்கலாம். நமக்கு ஏதோ கொடுத்தாரே என்ற நன்றியுணர்வின் காரணமாக அரசு அலுவலர் அந்தத் தேவையை நிறைவேற்றியிருக்கலாம். இவ்வாறு கொடுத்து வாங்குவது பின்னர்க் கையூட்டு என்னும் சிறப்புப் பெயர் பெற்றுவிட்டது. கையூட்டு பிறந்த கதைகளுள் இஃ தொன்று. மற்றொன்றும் கூறலாம்: அரசு அலுவலர் எந்த உதவியும் எதிர்பார்க்காமலேயே, இயற்கையாகவே, ஒருவ ரின் தேவையை உரிய காலத்தில் பயன்மிக்க முறையில் நிறைவேற்றியிருக்கலாம். அந்த நன்றி பாராட்டும் வகை யில், தேவையை நிறைவேற்றிக் கொண்டவர், நிறைவேற் றிய அலுவலர்க்கு உள்ளம் உவந்து ஏதேனும் அன்பளிப்பு செய்திருக்கலாம். இந்த அன்பளிப்பு பின்னால் கட்டாயப் படுத்தப்பட்டு கையூட்டு என்னும் பெயருக்கு உரியதாய் விட்டது. கையூட்டு பிறந்த இரண்டாவது கதை இது.

இந்தப் பழக்கம் வளர வளர, நாளடைவில், கையூட்டு கொடுப்பதும் வாங்குவதும் கட்டாயமாகி விட்டன. கையூட்டு தந்தால்தான் காரியம் கைகூடும் என்ற நிலை சில துறைகளில் சிலரிடையே ஏற்பட்டது. இது பின்னர்ப் பல துறைகளில் பலரையும் ஆட்கொண்டு விட்டது. இந் நிலையில், இன்னார்க்கு இன்ன தேவையை நிறைவேற்றிக் கொடுத்தால் அவர் இவ்வளவு நன்மையை அடையப்போகி றாரே -ஏன் அவர் நமக்கு ஏதேனும் தரலாகாது-என அரசு அலுவலர் எண்ணி வெளிப்படையாகவே-முன் கூட் டியே கையூட்டு கேட்கும் வழக்கம் உண்டாகி விட்டது. நாளடைவில் இந்தக் கையூட்டுக்கு மாமூல் என்னும் மாபெருஞ் சிறப்புப் பட்டம் சூட்டப்படலாயிற்று. கல்வித் துறையிலும் கையூட்டு-கடவுள் துறையிலும் ஒருவகைக் கையூட்டு-என்னே கொடுமை! கல்வித் துறையும் கடவுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/191&oldid=544847" இலிருந்து மீள்விக்கப்பட்டது