பக்கம்:உலகு உய்ய.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

பழமொழி. இது, ஆசிரியர் உட்கார்ந்து கொண்டு ஒன், றுக்கு இருந்த அந்தக் காலத்தில் எழுந்த பழமொழியாகும்.

பெரும்பாலும் இப்போது ஆசிரியர்கள் நீளக் கால் சட்டை

(suit) போட்டுக் கொண்டிருப்பதால் நின்றுகொண்டு

தான் ஒன்றுக்கு இருக்கிறார்கள். எனவே இப்போது பழ

மொழியை மாற்ற வேண்டும். ஆசிரியர் உலாத்திக்

கொண்டு ஒன்றுக்கு இருந்தால், மாணாக்கன் ஒடிக்

கொண்டு ஒன்றுக்கு இருப்பான்' என்பதாகப் பழமொழி

யைப் புதுப்பிக்கவேண்டும்.

புகை பிடித்தல், சூது ஆடல், கள் உண்ணுதல், காமக் களியாட் டயர்தல், ஒழுங்காக மனச்சான்றுடன் உழைக் காமை, பணம் பறித்துக் கொண்டு மதிப்பெண் (Mark) போடுதல் முதலிய ஒழுங்கின்மைகள் ஆசிரியர்களிடம் காணப்படுவது வருந்தத்தக்கது மட்டுமன்று; கண்டிக்கப்பட வேண்டியதும் தண்டிக்கப்பட வேண்டியதுமாகும். என்மேல் யாரும் சினம் கொள்ளலாகாது. சுமார் நாற்பது ஆண்டு காலம் கல்வித்துறையில் பணிபுரிந்து ஒய்வு பெற்றுள்ள யான், பலரிடம் நேரில் பார்த்தறிந்த பட்டறிவைக் கொண்டே இதனை எழுதுகிறேன். பெரியவர்கள் செய்வ தைப் பார்த்துப் பின்பற்றுதல் (Imitation) இளைஞரின் வழக்கம். எனவே ஆசிரியர்கள் ஒழுங்காய் நடந்து கொள்ள வேண்டும்.

நல்லுழைப்பும் நல்லொழுக்கமும் இல்லாத ஒருசார் ஆசிரியர்கள் இருக்கட்டும்! எல்லா நல்லிலக்கணங்களும் உடைய நல்லாசிரியர்களின் உழைப்பும் இந்தக் காலத்தில், காட்டில் காய்ந்த நிலவாய்-கற்பாறையில் கொட்டிய மழையாய்ப் பயனின்றிப் பாழாகிறது. மாணாக்கர் சிலர் இந்தக் காலத்தில் பள்ளிக்கு வருவதில்லை-பள்ளிக்கு வந் தாலும் வகுப்புக்கு வருவதில்லை-வகுப்புக்கு வந்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/193&oldid=544849" இலிருந்து மீள்விக்கப்பட்டது