பக்கம்:உலகு உய்ய.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195

னும் ஒழுக்கம் இருக்க வேண்டியது மிகவும் இன்றியமை

யாதது.

'ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்

ஒதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை’. (1)

என்பது முதுமொழிக் காஞ்சி என்னும் நூலின் பாடல். கல்வி யில்லாவிடினும் ஒழுக்கம் வேண்டும் என்பது கருத்து.

'மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பு ஒழுக்கங் குன்றக் கெடும்”. (134)

என்பது திருக்குறள் பாடல்.

'ஒதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்”. (11)

என்பது ஒளவையின் கொன்றைவேந்தன் பாடல்.

பார்ப்பானுக்கு வேதம் ஒதுதலை விட ஒழுக்கம் முக்கியம் என்பது இவற்றின் கருத்து. சுப்பிரமணிய பாரதியார் முத லான அறிஞர் பலர், கல்வியினும் ஒழுக்கத்தையே வற் புறுத்தி யுள்ளனர். எனவே, கல்வி நிறுவனங்களில் ஒழுங் குக் கட்டுப்பாடு (Discipline) மிகவும் இன்றியமையாத தாகும். அதற்கு அரசு ஆவன செய்து தர வேண்டும்.

பல்வேறு துறைகள்:

ஒவ்வொரு துறையையும் பற்றி விதந்து பேசினால் பெருகும்; விரிவஞ்சி விடுப்பாம். பொதுவாக, தொழில் துறை, உழவுத்துறை, வணிகத்துற,ை அரசு அலுவல்துறை, அரசியல் துறை, மருத்துவத் துறை, காவல் துறை, நீதித் துறை-முதலிய பல்வேறு துறைகளிலும் காணப்படும் ஊழல் களை அரசுகள் கண்காணித்து ஒழித்தால்தான், ஒழுங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/196&oldid=544852" இலிருந்து மீள்விக்கப்பட்டது