பக்கம்:உலகு உய்ய.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197

இந்தியாவில் ஆணும் பெண்ணும் தாமாகக் காதலித் துத் திருமணம் செய்துகொள்வது மிகவும் குறைவு; பெற் றோர்கள் பார்த்துத் திருமணம் செய்துவைப்பதே மிகுதி. ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்க நாடுகளிலும் காதல் திருமணம் (Love Marriage) மிகுதி. இந்தியாவில் கணவ னும் மனைவியுமாயிருப்பவர்கள் சாகும்வரை பிரியாதிருப் பதே இயல்பு. வெளி நாடுகள் பலவற்றில், மணம் செய்து கொண்டு கணவனும் மனைவியுமா யிருந்தவர்கள், பிரிந்து மண விலக்கு செய்து கொள்வதும் வேறு கணவனையும்மனைவியையும் மறுமணம் புரிந்து கொள்வதும் மிகுதி.

பிரியாத குடும்ப முறை:

என் தாய் நாடு என்பதற்காகச் சொல்லவில்லை; நடு நிலைமையோடு சொல்கிறேன்; கணவனும் மனைவியும் இறுதிவரை இணைபிரியாதிருக்கும் இந்திய முறையே சிறந்ததாகும். இந்தியாவிலும்-தமிழ் நாட்டில் இந்த முறை மிகவும் இறுக்கம் பெற்றதாகும். மறு பிறவியிலும் கணவ னும் மனைவியும் பிரியாதிருக்க வேண்டும் என்பது தமிழர் மரபு என்பதைத் தமிழ் நூல்களால் அறியலாம்: அம்மூவ னார் பாடிய குறுந்தொகை நூற் பாடல் கருத்து வரு மாறு: இப் பிறவிபோய் மறு பிறவி எடுப்பினும் நீயே என் கணவனாகவும் யானே உன் மனைவியாகவும் இருக்க வேண்டும் எனக் கணவனை நோக்கி மனைவி கூறுகின்

றாள்:

'இம்மை மாறி மறுமை யாயினும்

நீயாகியர் என் கணவனை

யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே’ (49)

என்பது அப்பாடல். நம் காதலிக்கும் நமக்கும் இடையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/198&oldid=544854" இலிருந்து மீள்விக்கப்பட்டது