பக்கம்:உலகு உய்ய.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

என்பது பாடல். மேலே கூறியவாறு மறுபிறவிகளில் ஒன்றி யிருக்க முடியாது போயினும், இந்தப் பிறவியிலாவது பிரி யாத முறையையே உலகில் உள்ள மக்களினம் முழுவதும் பின்பற்ற வேண்டியது இன்றியமையாததாகும். இந்திய முறை, குடும்ப வாழ்க்கை எளிதாகவும் இனிதாகவும் நடை பெறுவதற்கு ஏற்ற முறையாகும். அடிக்கடி மண விலக்கும் மறுமணமும் செய்து கொள்ளும் முறை, குடும்ப வாழ்க்கையைத் தொல்லைக்கும் சிக்கலுக்கும் உரியதாக் கும். ஒருவன் பெண்கள் பலரை மாறி மாறி மணந்து பிள்ளைகளைப் பெறுகின்றான்; ஒருத்தி ஆண்கள் பலரை மாறி மாறி மணந்து பிள்ளைகளைப் பெறுகிறாள். இந் நிலையில், ஆணும் பெண்ணும் கை மாறிக்கொண்டேயிருப் பின், இந்தப் பல பட்டறைப் பிள்ளைகளை வளர்ப்பவர் யார்? இப்பிள்ளைகள் யாரிடம் நிலையாய்த் தங்குவார் கள்? இம்முறையினால், இப்பிள்ளைகள், தக்க வளர்ப்பு முறையின்றி மனம் உடைந்து போவதும் போக்கிரிகளாக மாறுவதும் உண்டுஎன்பதாகச் சொல்லப்படுகிறது. பிள்ளை களின் நிலைமட்டும் இத்தகைய தன்று: பெற்றோர்களின் நிலையும் இத்தகையதே. வயது கடந்த முதியோர்கள் எந் தப் பிள்ளையிடம் தங்குவார்கள்? இவர்கட்கு நிலையான புகலிடம் எது? இந்தத் தரங் கெட்ட குடும்ப வாழ்க்கை முறையினால், அரசு, சிறுவர் இல்லங்களும் முதியோர் இல்லங்களும் அமைத்துக் காக்க வேண்டியது தவிர வேறு வழியில்லை.

ஒருவர்க்கு ஒருவரே.

என் உறவினர் குடும்பம் ஒன்றிலிருந்து கணவனும் மனைவியும் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தனர். அங்கே அமெரிக்கர் சிலர், நம் பெண்ணை நோக்கி, இப்போது உனக்குக் கணவராயிருப்பவர் உனக்கு எத்தனையாவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/200&oldid=544856" இலிருந்து மீள்விக்கப்பட்டது