பக்கம்:உலகு உய்ய.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

201

வரே என்ற முறை வட இந்தியாவில் சில இடங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. பல ஆயிரம் ஆண்டுகட்கு முன் வட இந்தியாவில் நடைபெற்ற பாரத வரலாற்றில், 'பஞ்ச பாண்டவர் எனப்படும் உடன் பிறந்தார் ஐவர்க்கு, துரோபதை என்னும் ஒரு பெண் மனைவியாக இருந்த தாகக் கூறப்பட்டுள்ளது. இப்போதும் சில இடங்களில்: குடும்பத்தில் மூத்த மகன் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டால், அவளே, அடுத்த பிள்ளைக்கும் மனைவியாக இருக்கும் முறை உள்ளதாகத் தெரிகிறது.

நாகரிகம் இன்மை:

தென்னிந்தியாவில் ஒருத்தி பலருக்கு மனைவியாய் அமையும் முறை இல்லாவிடினும், மண விலக்கும் மறு மண மும் செய்து கொள்ளும் பழக்கம், பின் தங்கிய இனத்தவர் சிலரிடையே சிறுபான்மை உண்டு. மற்றவர்கள் இவர் களை நாகரிகம் அற்றவராகக் கருதுவது வழக்கம்.

இந்தியாவைச் சேர்ந்தனவும் இந்தியப் பெரு நிலத் துக்கு நெடுந்தொலைவில் வங்கக் கடலில் உள்ளனவும் ஆகிய அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் வாழும் மக்கள், இந்தியப்பெருநிலத்தில் வாழும் மக்களினும் நாகரிகம் அற்ற காட்டு மிறாண்டிகளாகவும் புதிய உலகை அறியாத பழங் குடி மக்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களிடையே மணவிலக்கும் மறுமணமும் இயற்கை என்பதாகத் தெரி கிறது. பல பிள்ளைகளைப் பெற்ற ஒருத்தி, மற்ற பெண்களை நோக்கி, நான் பல பிள்ளை பெற்ற அனுபவ சாலி; எனக்கா பக்குவம் சொல்லுகிறீர்கள்?’ என்று, தான் பல பிள்ளை பெற்றமையைப் பெருமையாகப் பேசுவது தமிழ்நாட்டில் உண்டு. ஆனால், அந்தமான் - நிக்கோபார் இவுகளில் உள்ள பெண்கள் சிலர் பெருமையாய்ப் பேசுவது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/202&oldid=544858" இலிருந்து மீள்விக்கப்பட்டது