பக்கம்:உலகு உய்ய.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

மணவிலக்கும்மறுமணமும் செய்து கொள்ளலாம். மனைவி ஒழுக்கம் கெட்டவளாயிருப்பின், கணவன்.அவளை விலக்கி விடுவது இயற்கை-இது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. எனவே, கடமை உணர்வுடனும் தியாக உணர்வுடனும் உய ரிய மக்கட் பண்புடனும் நடந்து கொள்ளின் இச்சிக்கல் தீரும். இது இந்தியாவில் வெற்றியுடன் நடைபெறுகிறது. இந்த நன்முறையை உலகம் முழுதும் கடைப்பிடித்தால் மனித வாழ்வு முழுமை பெறும். -

ஒருவர் முறையின் நன்மைகள்:

ஒருவருக்கு ஒருவரே என்ற முறையின் நன்மைகளை இங்கே மறப்பதற்கில்லை. இதனால் குடும்பத்தில் குறை இராது-நிறையிருக்கும்; குழப்பம் இராது-தெளிவு இருக்கும்; சண்டை சச்சரவு இராது.அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் ஊர்சிரிக்காது-ஊர்மெச்சும்; மணவிலக்குக்காக நீதிமன்ற மும் காலுமாய் அலைய வேண்டியதில்லை; கணவனோமனைவியோ திக்கற்றவராய்க் கைவிடப்படார்; குழந்தை வளர்ப்பு முறையும் முதியோரைப் பேணும் முறையும் வெற்றியுடன் நடைபெறும். எல்லா வகையிலும் இன்பமே! எனவே இறுதிவரை ஒருவர்க்கு ஒருவரே என்ற நன் முறையை உலகம் முழுவதும் கடைப்பிடித் தொழுகுவதே மக்கட் பண்பாகும். இல்லையேல்,ஆடு மாடுகட்கும் மக்கட் கும் வேறுபாடு இல்லாமற் போய்விடும்.

பால் உறவு

எல்லா உயிர்கட்கும் ஆண்-பெண் பால் உறவு என்னும் இயல்பூக்கம்(Sex Instinct) உண்டு. மரம் செடி கொடிகட்கும் இது உண்டு. இந்தப் பால் ஊக்கத்துக்கு இளம் பருவத்தில் அப்பா அம்மா விளையாட்டிலேயே, திருமண மாதிரி விளை யாட்டிலேயே வித்திடப்படுகிறது. உரிய வயது வந்ததும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/207&oldid=544863" இலிருந்து மீள்விக்கப்பட்டது