பக்கம்:உலகு உய்ய.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

207

இந்தப் பால் உறவுக் கவர்ச்சி (Sex Appeal) பேருருவம் பெறு கிறது. இது தொடர்பாகப் பல ஊழல்கள் - ஒழுங்கின் மைகள் ஆண்களிடத்தும் பெண்களிடத்தும் காணப்படுகின் றன. ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் ஒரு வகை உடல் உறவு கொள்வது, பெரியவர்கள் ஒன்றும் அறியாத சிறுவர்-சிறுமியரோடு உடல் உறவு கொள்வது, ஒருவர் விரும்பாமலேயே மற்றொருவர் வற்புறுத்திக் கட் டாயப் படுத்தி (பலாத்காரமாக) உடல் உறவு கொண்டு கற்பழிப்பது முதலிய ஒழுங்கின்மைகள் நடைபெறுகின்றன. “காமத்துக்குக் கண் இல்லை’ என்னும் பழமொழி அனுபவ மொழி போலும்!

பிறன் இல் விழையாமை;

பிறன் இல் விழையாமை என்றால், பிறன் மனைவியை விரும்பாமை என்பது பொருளாகும். இந்தத் தலைப்பில் திருவள்ளுவர் திருக்குறள் நூலில் பத்துப் பாடல்கள் பாடிப் பிறன் மனைவியை விரும்பக் கூடாது என அறிவுறுத்தியுள் ளார். அவற்றுள் ஒரு பாடலைப் பார்ப்போமே:

'பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு” (148)

என்னும் பாடலை எடுத்துக் கொள்வோம். பிறன் மனை வியை நோக்காத பேராண்மை (வீரம்), நல்லோர்க்கு அற மும் ஆகும், உயர்ந்த ஒழுக்கமும் ஆகும் என்பது இதன் கருத்து. பாம்பையும் கையால் பிடித்து இழுத்து ஆட்டுவான்; பகைவரையும் பறக்கடிப்பான்; பெரியபோர்க் களத்தில் பம்பரம் போல் சுழன்று பொருது வெற்றிவாகை சூடுவான்-அத்தகைய ஆண்மை (வீரம்) உடையவன் ஒரு வன், கட்டழகி ஒருத்தியைக் கண்டால் கலங்குகிறான்அவளைப் பின் தொடர்கிறான்-அவள் பார்த்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/208&oldid=544864" இலிருந்து மீள்விக்கப்பட்டது