பக்கம்:உலகு உய்ய.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

போதும் என்று பல் இளிக்கிறான். பேசினால் போதும் என்று துவள்கிறான்-அவள் என்ன சொன்னாலும் சொன்னபடியே நடக்கிறான்; இவன் பகைவரிடம் காட் டிய சினம், முறைப்பு, அஞ்சாமை எல்லாம் இப்போது பஞ்சாய்ப் பறக்கின்றன. எதிரியிடம் அகப்பட்டுக் கெஞ்சு கின்ற கோழைபோல் ஆகின்றான் அவளிடம். என்னே வியப்பு? இதனால் தான், ஒரு பெண்ணைப் பொருட் படுத்தி அவளுக்கு அடிமையாகாமல்-கலங்காமல் நிற்கும் காளைத் தன்மையை வெற்று ஆண்மை என்னாமல், பேர் ஆண்மை (பெரியவீரம்) என்றார் வள்ளுவர். பிறன் மனைவியைச் சேராதிருப்பது பேராண்மை என்னா மல் பிறன் மனைவியைக்கண்ணால் ஏறிட்டு நோக்காதிருப்பது பேராண்மை எனக் கூறியுள்ளார். இந்த நுட்பத்தை நுணுகி அறிய வேண்டும். இந்தப் பேராண்மை, அறமும் உயர்ந்த ஒழுங்கும் ஆகும்.

பிறன் மனைவியை விரும்புவதால் உண்டாகும் கேடு கள் பல. ஒரு குடும்பம் பாழாகிறது; பழிபாவம் உண்டா கின்றன; பகையும் போரும் மூள்கின்றன; கொலையும் நடக்கிறது. இராமனின் மனைவியாகிய சீதையை இரா வணன் விரும்பியதால், இராமாயணப் பெரும்போர் நிகழ்ந்த வரலாற்றை ஈண்டு நினைவு கூரவேண்டும். 'இந்திரன் கெட்டதும் பெண்ணாலே-சந்திரன் கெட் ட தும் பெண்ணாலே" என்பதையும் இங்கே எண்ணிப் பார்க்க வேண்டும்.

பிறன் மனைவியை விரும்பலாகாது எனில், இன்னும் திருமணம் ஆகாத பெண்ணையும் கணவனையிழந்த கைம் பெண்ணையும் விரும்பலாமா என்று வினவலாகாது. திருமணம் ஆகாதவள் இன்னொருவனுக்கு மனைவியாக ஆக இருப்பவள்-கைம்பெண்ணோ, இன்னொருவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/209&oldid=544865" இலிருந்து மீள்விக்கப்பட்டது