பக்கம்:உலகு உய்ய.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

209

மனைவியாகி இருந்தவள்-எனவே, எல்லாருமே பிறர் மனைவியே என்பதை உள்ளடக்கியே திருவள்ளுவர் பிற னில் விழையாமை என்னும் தலைப்பைத் தந்துள்ளார். கன்னியையோ கைம் பெண்ணையோ திருமணம் செய்து கொள்ள விரும்பலாம்-முறையாகத் திருமணம் செய்து கொள்ளலாம். மணக்காமல் முறைகேடு செய்யலாகாது.

பிறன் மனைவியை வற்புறுத்திப் புணரலாகாதுஆனால் அவளே விரும்பிவரின், அவளோடு உடலுறவு கொள்ளலாமா என்று வினவலாம். இஃதும் கூடாது. இது, அவளுடைய கணவனை வஞ்சித்த பழிபாவச் செய லாகும். இதனால் இரு தரப்புக் குடும்பங்கட்கும் பேரி ழப்பு நேரும். அவளுடைய கணவன் அறியாமல்-வேறு எவரும் அறியாமல்-அவளோடு தொடர்பு கொள்ள வேண்டி வரும். இதனால் உண்மையான இன்பமும் பெற முடியாது. அச்சத்துடனேயே அனைத்தும் நடைபெற வேண்டியிருக்கும். இதனை,

புக்கவிடத்து அச்சம், போதரும் போது அச்சம், துய்க்கும்போது அச்சம், தோன்றாமல் காப்பச்சம், எக்காலும் அச்சம் தருமால், எவன்கொலோ உட்கான் பிறனில் புகல்” (83)

என்னும் நாலடியார்ப் பாடல் நன்கு நவின்றுள்ளது. பிறன் மனைவியை விரும்பி, அவன் வீட்டுக் கொல்லைப்புற வாயிலில் யாருக்கும் தெரியாமல் அவளது வருகைக்காகக் காத்து நிற்கும் முட்டாளைவிட, வடிகட்டிய முட்டாள்கடைந்தெடுத்த முட்டாள் வேறு யாரும் இல்லை:

'அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை

நின்றாரின் பேதையார் இல்” (142)

என்பது திருக்குறள் பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/210&oldid=544866" இலிருந்து மீள்விக்கப்பட்டது