பக்கம்:உலகு உய்ய.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

கற்பழிப்பு ஒறுப்பு:

திருடனுக்குக் கை-கால் குறைத்தல், கொலை ஆகிய ஒறுப்புகள் தரவேண்டியது போலவே, பிறர் பெண்ணைக் கற்பழிப்பவர்க்கும் தரவேண்டும். திருடனுக்குக் கொலை ஒறுப்பு உண்டு என்பதைச் சிலப்பதிகாரம் அறிவிக்கிறது" கொடியவர்களைக் கொற்றவன் கொலை செய்யலாம் எனத் திருக்குறள் கூறுகிறது. கொடியவர்களுள் கற்பழிப் பவர்கள் மிகவும் கொடியவர்களாவர். பண்டு, பிறர் மனை வியை விரும்பியவருக்குக் கால் குறைத்தல், கொலை ஆகிய தண்டனை உண்டு என்பதை நாலடியார் நூற் பாடல்களால் அறியலாம்.

“காணின் குடிப்பழியாம்; கையுறின் கால் குறையும்; ஆணின்மை செய்யுங்கால் அச்சமாம்” (84)

'அச்சம் பெரிதால், அதற்கின்பம் சிற்றளவால்; நிச்சம் நினையுங்கால் கோக்கொலையால்” (81)

என்பன நாலடியார் நூலின் பாடல் பகுதிகளாகும்.

பிறர் பெண்ணை விரும்புதலைக் கண்டிப்பது மட்டு மன்று; பணத்துக்காக உடம்பை விற்றுப்பிழைக்கும் விலை மகளிரின் தொடர்பும் கூடாது எனத் திருக்குறள், நாலடி யார் முதலிய அறநெறி நூல்கள் கண்டித்துள்ளன. விலை மகளிர் தொடர்பே கூடாதெனின், பிறர் பெண்ணின் தொடர்பு பெரிதும் கொடிய செயலன் றோ? -

பெண்டிரின் குறைபாடுகள:

ஆடவர் சிலரும் பெண்டிர் சிலரும் இறுதிவரை மணம்

செய்து கொள்ளாமலேயே காலம் கழிக்கின்றனர். இவர்

களுள் சிலர் இறுதிவரையும் இதில் வெற்றி பெறுவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/211&oldid=544867" இலிருந்து மீள்விக்கப்பட்டது