பக்கம்:உலகு உய்ய.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

211

தில்லை; இடையிலேயே வழுக்கி விழுகின்றனர். இதனால் தமக்குப் பழியோடு பிறந்த குடிக்கும் இழிவு ஏற்படுகிறது. எனவே, இறுதிவரை நிறை காக்க முடியாத இன்னார், முறையே மணம் செய்து கொள்ளுதலே நன்று. é -

மணம் செய்து கொண்டு கணவருடன் வாழும் மகளிர் சிலரும், வேறு பிறருடன் கள்ளக் காதல் கொண்டொழுகு வது உலகியலில் கண் கூடு. தன் கணவன் மிகுந்த பேரழகு உடையவனாகவும் இளமைப் பருவத்தினனாகவும எவரை யும் மயக்கும் இசை வல்லவனாகவும் பெண்களின் கண் களைக் கவரும் இனிய பார்வை உடையவனாகவும் நய மான இன்சொல் பேசுபவனாகவும் இருப்பினும், அவனை விட்டுவிட்டு, அயல் ஆடவர்மீது மனம் நாடுவது மகளிர் சிலர்க்கு இயல்பு-என்னும் கருத்தினை, குமர குருபர அடி களார், நீதிநெறி விளக்கம் என்னும் தமது நூற்பாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்:

'ஏந்தெழில் மிக்கான் இளையான் இசைவல்லான் காந்தையர் கண்கவர் நோக்கத்தான்-வாய்ந்த நயனுடை இன்சொல்லான் கேள்எனினும் மாதர்க்கு அயலார்மேல் ஆகும் மனம்’’. (82)

என்பது அந்தப் பாடல். குமர குருபரர் உலகியலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார். பட்டினத்தார் என்னும் பெரியார் கூறியுள்ள கடுமையான கருத்து ஒன்று அதிர்ச்சி தருகிறது. “கைப்பிடித்து மணந்த கணவன் தன்மேல் கையை வைத்தபடி தூங்கிக் கொண்டிருக்கும்போது, அசையாமல்-ஆடாமல் அவன் கையை எடுத்து அப்பால் வைத்துவிட்டு, அயலான் ஒருவனது இருப்பிடத்துக்கு மனம் ஒப்பிச்சென்று அவ்வயலானுடன் படுத்து உடலுறவு கொண்டுவிட்டு மீண்டும் வந்து தன் கணவன் பக்கத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/212&oldid=544868" இலிருந்து மீள்விக்கப்பட்டது