பக்கம்:உலகு உய்ய.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

படுத்துக்கொண்டு ஒன்றும் அறியாதவள் போல் உறங்கும் வஞ்சகப்பெண்ணை எப்படி நம்பி அவளோடு வாழ முடி யும்? ஏ இறைவா’ என்று, பட்டினத்தார், கடவுளை விளித்து நொந்து கூறியுள்ளார். இதனை,

'கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை எடுத்து அப்புறம் தன்னில் அசையாமல் முன்வைத்து அயல்

- வளவில் ஒப்புடன் சென்று துயில் நீத்துப் பின் வந்து உறங்கு

ᎧᎷ 6a 6lᎢ எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சி ஏகம்பனே'.

(திருவேகம்பமாலை-3) என்பது அவரது பாடல். இது போன்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டுதான், ‘ஆல கால நஞ்சையும் நம்பலாம்-சேலை கட்டிய மாதரை நம்ப முடியாது’ எனச் சிலர் கூறிகின்றனர் போலும். ஒரு சிலர் தவறுவதால், அனைவரையும் அவ்வாறு கூறுவது அறநெறியாகாது-அறிவுடைமையும் ஆகாது.

சமூகக் கட்டுப்பாடு;

மக்கள் தோற்றத்தின் தொடக்கக் காலத்தில், மக்கள் தனித் தனியே சிதறிக் கிடந்தனர். அப்போது ஆண்-பெண் பால் உறவும் ஆடுமாடு போல் கண்டபடி இருந்திருக்கக் கூடும். பின்னர் மக்கள் ஒன்று கூடிச் சமூகமாய்-குழுவாய் வாழத் தலைப்பட்டனர். அதன் பின்னர்ப் பல வகையான சமூகக் கட்டுப்பாடுகள் ஏற்பட்டன. அவற்றுள் ஒன்று பால் உறவுக் கட்டுப்பாடும் ஆகும். இன்னாருக்கு இன்னார் மனைவி - இன்னார்க்கு இன்னார் கணவர் என்ற கட்டுப்பாடு வரையறுக்கப் பெற்று வாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/213&oldid=544869" இலிருந்து மீள்விக்கப்பட்டது