பக்கம்:உலகு உய்ய.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

213

நடைபெற்றது. ஆணாகட்டும் - பெண்ணாகட்டும் இன் னார் இன்னாரைத் தவிர வேறொருவரையும் விரும்பக் கூடாது என்ற கட்டாயமும் ஏற்பட்டது . இவ்வாறு ஆண்டாண்டு காலமாய் வந்த அடிப்படைப் பழக் கத்தினால், ஆண்-பெண் பால் உறவில், திட்டவட்டமான ஒழுங்கு முறை ஏற்பட்டது. இதன் பயனாய், ஒருவன், தன் தாயுடனோ- தமக்கையுடனோ தங்கையுடனோ மகளுடனோ-இன்ன பிறருடனோ உடலுறவு கொள்ள விருப்புவதில்லை. இதேபோல, ஒருத்தி, தன் தந்தை யுடனோ-தமையனுடனோ- தம்பியுடனோ- மகனுடனோ இன்ன பிறருடனோ உடலுறவு கொள்ள விரும்புவ தில்லை. இந்த ஒழுங்கு முறை, ஆண்டாண்டு காலமாய் ஒழுகிவந்த அடிப்படைப் பழக்கத்தின் பயனாய், உட லோடு மட்டுமன்று-உயிர்ப்பண்போடும் ஊறிப் போன

ஒன்றாகும்.

ஒழுங்கு முறையுள்ள இந்த அடிப்படைப் பண்பு இன் னும் பரந்து விரிந்து செல்ல வேண்டும். அதாவது, ஒரு வன், தன் மனைவியைத் தவிர, மற்ற மடந்தையரை, தாய் - தமக்கை - தங்கை - மகள் - இன்ன பிறர் போலவே கருதவேண்டும்; இது போலவே, ஒருத்தி, தன் கணவ னைத் தவிர, மற்ற ஆடவரை, தந்தை - தமையன் - தம்பி - மகன் - இன்ன பிறர்போலவே கருதவேண்டும். இந்த ஒழுங்குமுறை, உடல் குருதியோடு ஊறிவிடின் உயிர்ப் பண்போடு இரண்டற இணைந்துவிடின், உலகில் ஆண் - பெண் பால் உறவில் ஒரு சிறிதும் ஊழலுக்கு இடம் இராது. மற்றும், ஆண்களும் பெண்களும் எவ்வாறு பழக வேண்டும் என்ற பால் கல்வி (Sex Education) a ova Lodi. கள் அனைவருக்கும் அளிக்கப்பட வேண்டியது மிகவும் இன்

றியமையாததாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/214&oldid=544870" இலிருந்து மீள்விக்கப்பட்டது