பக்கம்:உலகு உய்ய.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

215

புடைய மகளிருள்ளும் சிலர், கணவர் போதிய அளவு புணர்ச்சியின்பம் தராவிடினும், உயர்ந்த சிறந்த ஆடை அணிகலன்கள் வாங்கித் தராவிடினும், போதிய அளவு மற்ற உடைமைகளையும் பெற்றிராவிடினும், தாம் விரும் புவனவற்றையெல்லாம் செய்ய இடம் தராவிடினும், கண வரைப் போதிய அளவு மதிப்பதில்லை. கணவன்மீது அச் சம் இருந்தால் போதாது - உண்மையான அன்பு இருக்க வேண்டும்; கடமையுணர்வு இருந்தால் போதாது - கனிந்த காதல் உணர்வு வேண்டும். ஒப்புக்கு வாழும் குடும்ப வாழ்க்கை போதாது - உண்மையாண அன்புடன் வாழும் குடும்ப வாழ்க்கையே வேண்டும். .

மனைவி ஒழுங்காயிருப்பது மட்டும் போதுமா? கனவ னும் ஒழுங்குடன் ஒழுகவேண்டும். சில குடும்பங்களில் ஆடவர் மது அருந்தியும் சூதாடியும் உள்ள பொருள்களை யெல்லாம் இழந்து மனைவி மக்களைத் தவிக்கச் செய்கின் றனர். குடிக்கும் சூதுக்கும், மனைவியை அடித்து உதைத்து அவளது தாலியை முதற்கொண்டு வலிந்து பற்றிச் செல் லும் குரங்குப் பயல்களும் உளர். குடித்துவிட்டு வரின் மனைவியைத் திட்டுவதும் உதைப்பதும் ஆடவர் சிலரின் அன்றாட வாடிக்கையான வழக்கமாகும். மனைவிமட்டும் வேறு ஆடவரை விரும்பலாகாது; ஆடவர் மட்டும் வேறு பெண்டிரை விரும்பலாமா? கட்டின கட்டழகு மனைவி யிருக்க, வேறு கழுதைகளுடன் தொடர்பு கொண்டு மனை வியை நடுத்தெருவில் விடும் மடையரும் உளர். இத்தகைய கணவருடன் மனைவி வாழ்க்கை நடத்துவது எவ்வாறு? எனவே, ஆடவரிடத்தும் உண்மையான அன்பும் ஒழுங்கும் இருக்கவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/216&oldid=544872" இலிருந்து மீள்விக்கப்பட்டது