பக்கம்:உலகு உய்ய.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

கலந்த காதல்:

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள அன்பு அல்லது காதல் எனப்படுவது, அழகு - புணர்ச்சி - ஆடை அணிகலச் சிறப்பு - மணமகள் விலைப்பணம் (வரதட்சணைDowry) - மற்ற உடைமைகள் ஆகியவை காரணமாகச் செயற்கை முறையில் உண்டாகக் கூடியதன்று; இவை காரணமாக உண்டாயின், இவை போனால் காதலும் கனி வும் உடன்போய்விடும். இவ்வாறின்றி, இயற்கையாக இரு வர் உள்ளமும் தாமாகக் கலந்த காதலே உண்மைக் காத லாகும். இங்கே குறுந்தொகை என்னும் நூலின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. உள்ளங் கலந்த காதலரி டையே பேச்சு காணப்படுகிறது. காதலன் காதலியிடம் கூறுகிறான்: 'நாம் இருவரும் கூடுவதற்கு முன்பு, என் தாயும் உன் தாயும் யாரென அறியோம்; என் தந்தையும் உன் தந்தையும் எவரெனத் தெரிந்திலோம்; யானும் நீயும் எந்த வழியிலும் இதற்கு முன் அறிந்தவர் இல்லை; ஆனால், செம்மண் நிலத்திலே பெய்த மழைநீர், அம்மண் னின் நிறம் - சுவை - மணம் ஆகியவற்றைப் பெற்று அதனோடு இரண்டறக் கலந்து விடுவது போல, உண்மை அன்புடைய நம் இருவர் உள்ளங்களும் இயற்கை யாகத் தாமாக ஒன்றிக் கலந்துலள்ளன'- எனக் காதலன் கூறுகிறான். இனிப் பாடல் வருமாறு:

'யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர் யானும் நீயும் எவ்வழி அறிதும் செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந் தனவே”. (40) என்பது அந்தக் குறுந்தொகைப் பாடல். இவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/217&oldid=544873" இலிருந்து மீள்விக்கப்பட்டது