பக்கம்:உலகு உய்ய.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

வுளை மறந்து விட்டனர்; எனவே, இந்நிலையை மாற்றி மக்களைப் பிரிப்பதற்காகக் கடவுள் அந்த ஒரு மொழி யைப் பல மொழிகளாகப் பிரித்து விட்டார் - என்பது அந்தக்கதை. இக் கதையில் சிற்சிலர் சிற்சில மாற்றங்கள் கூறலாம்.

இந்தக் கதையின் துணைக் கொண்டு சில செய்தி களை உய்த் துணரலாம். ஒரே மொழி இருப்பது உலக மக்களை ஒன்று படுத்தும் ஒரு கருவியாகும் - ஒரு மொழி யிலிருந்து பல மொழிகள் பிரிவதுண்டு - மொழி பிரியப் பிரிய மக்களிடையே பிளவு ஏற்படும் - என்னும் செய்தி கள் இக்கதையால் அறியப்படலாம். ஆனால் இது கட்டுக் கதையே! எண்ணற்ற பொருள்களை உலகில் மக்கள் படைத்திருப்பது போலவே, மொழிகளையும் மக்களே படைத்தனர் என்னும் கொள்கையே உண்மையானது. தொடக்கக் காலத்தில் மக்களின் பல்வேறு ஒலிப்புக்களி லிருந்து மொழிகள் இயற்கையாகத் தோன்றத் தொடங்கி யிருப்பினும், பின்னர் அந்த ஒலிப்புகட்கு உருவம் தந்து இலக்கிய இலக்கணங்களைப் படைத்து மொழி என்னும் முத்திரை யிட்டமை முற்றிலும் மக்கள் செயலே.

மொழியின் தோற்றம்:

‘உலகுக்கு ஒரே பொது மொழி என்னும் கொள் கையை உருவாக்க, மொழிகள் தோன்றிய வரலாறு குறித்து ஒரு சிறிது எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. வாயிலிருந்து வெளிப்படும் ஒலியே-ஒலிப்பே மொழியெனப் படுவது. இது இயற்கையாக எழுந்தது என்பர் ஒரு சாரார். பறவை-விலங்குகளின் ஒலிகளைக் கேட்டு அவ் வாறே மக்கள் தாமும் ஒலியெழுப்பினர் என்பர் இன் னொரு சாரார். பல்வேறு உணர்ச்சிகளையும்-மன எழுச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/221&oldid=544877" இலிருந்து மீள்விக்கப்பட்டது