பக்கம்:உலகு உய்ய.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

லாயினர். பேச்சொலிக்கு உருவம் தந்த பதிவே எழுத்து மொழியாகும். பேச்சு மொழி ஒரு மாந்தரின் உண்மை யான உருவம் போன்றது. எழுத்து மொழியோ, அம்மாந் தரின் புகைப்படம் போன்ற செயற்கை அமைப்பாகும்.

எழுத்து மொழி:

சொற்றொடர்களிலிருந்து தனித்தனிச் சொற்கள் பிரிந்தன என்றோம். சொற்களிலிருந்து தனித்தனி எழுத் துகள் பிரித்து அறியப்பட்டன, அரிசி என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம்; அதை அலகிடுங்கால், அ-ரி-சி-என மூன்று ஒலி இருக்கக் கண்டனர். ஒவ்வோர் ஒலிக்கும் ஒரு வரிவடிவக் குறியீடு அமைக்கத் தொடங்கினர். இவ்வாறு பல எழுத்துக்கள் உருவாக, பல எழுத்துக்களைச் சேர்த் துச் சொற்களையும், பல சொற்களைச் சேர்த்துச் சொற் றொடர்களையும் எழுதலாயினர், இது பெரும்பாலும் எல்லா மொழிகட்கும் பொருந்தும். ஆனால், சீனமொழிச் சொல் ஒவ்வொன்றும் படம் போன்ற ஒரு வகைக் குறி யீட்டைப் பெற்றுள்ளது. இதுபோல் இரண்டொரு விதி விலக்கும் இருக்கலாம். படம் போன்றிருப்பினும், பேச்சு மொழிக்குரிய வரிவடிவமாக இருப்பது எண்ணத்தக்கது. இவ்வாறு எழுத்து மொழி தோன்றலாயிற்று. பின்னர் எழுத்து மொழி, பல மொழிகளிலும் பல நூல்களாகப் பரந்து விரிந்து வளர்ந்து வரலாயிற்று.

ஒலி ஒப்புமை:

பொதுவாக எந்த மொழியை எடுத்துக்கொள்ளினும், அந்த மொழியிலுள்ள ஒரு சொல்லின் வரிவடிவத்தை எழுதுதற்கு வேண்டிய எழுத்துக்கள், பெரும்பாலும் எல்லா மொழிகளிலும் இருக்கும். எடுத்துக்காட்டாக, 'முருகு' என்னும் ஒர் ஒலி வடிவை எடுத்துக் கொள்ளின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/223&oldid=544879" இலிருந்து மீள்விக்கப்பட்டது