பக்கம்:உலகு உய்ய.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

223

அதற்குத் தமிழ் மொழியில் 'முருகு' எனவும், ஆங்கில மொழியில் Muruku எனவும், பிரெஞ்சு மொழியில் 'MOUROUKOU எனவும் வரிவடிவம் கொடுக்க முடியும். இந்தக் கருத்தை இங்கே தந்ததன் நோக்கம், பெரும்பா லான ஒலி வடிவங்கள் எல்லா மொழிகளிலும் ஒத்திருக் கும்-சிறுபான்மை ஒலி வடிவங்களே மொழிக்கு மொழி வேறுபட்டிருக்கும் என்னும் கருத்தை வலியுறுத்துவதே யாகும். எடுத்துக்காட்டாக, இலத்தீன் மொழியிலுள்ள 'F' என்னும் எழுத்து தமிழில் இல்லை. தமிழில் உள்ள குறில்-நெடில் பாகுபாடும், ள, ற முதலிய எழுத்துக்களும் இலத்தீனில் இல்லை. இலத்தீனில் இல்லையெனில், அம் மொழியின் எழுத்தால் எழுதப்படும் பிரெஞ்சு, ஆங்கிலம் முதலிய மொழிகளிலும் இல்லை என்பது பொருளாகும். தமிழில் உள்ள ‘ழ’ என்னும் எழுத்து இலத்தீனிலும் அதன் நேர் வழிமொழிகளாகிய பிரெஞ்சு, இத்தாலி முதலிய சில மொழிகளிலும் உண்டு. அதாவது G என்னும் வரி வடிவம் அம்மொழிகளில் ழெ’ எனவும், ' என்னும் வரி வடிவம் அம்மொழிகளில்"ழி’ எனவும் ஒலிக்கப்படுகின்றன. ஆங்கிலத்தில் G என்பது ஜி எனவும், என்பது ஜே’ எனவும் ஒலிக்கப்படுகின்றன. ‘ழ’ என்னும் தமிழ் எழுத்து ஒலி ஆங்கிலத்திலும் இல்லை; இன்னும் உலக மொழிகள் பலவற்றிலும் இல்லை.

மற்றும், சமசுகிருத மொழியில் உள்ள க,ச,ட,த,ப என்னும் எழுத்துக்களின் நந்நான்கு வகை வடிவங்களும், ஹ, க்ஷ, ஷ, ஜ, ஸ, என்னும் கிரந்த எழுத்துகளின் வடிவங் களும் தமிழில் இல்லை. இவ்வாறு சிற்சில வடிவங்களே மொழிக்கு மொழி வேறுபட்டிருக்குமேயன்றி, பெரும் பாலான வடிவங்கள் எல்லா மொழிகளிலும் ஒத்தே இருக்

(5ւն.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/224&oldid=544880" இலிருந்து மீள்விக்கப்பட்டது