பக்கம்:உலகு உய்ய.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

சமசுகிருதத்தின் க,ச,ட,த,ப- எழுத்துக்களின் நந் நான்கு வகை வரிவடிவங்களின் ஒலியைத் தமிழில் வேறு வகையில் காணலாம். அகம், பக்கம், தங்கம், தங்ங்கம் (ஒற்றளபெடை) என்னும் நான்கு சொற்களிலும் 'க' என் னும் எழுத்து, வெவ்வேறு வகையான நான்கு ஒலிகள் பெறுவதை அறியலாம. பேசல், அச்சம், தஞ்சம்,தஞ்ஞ்சம் என்னும் நான்கிலும்'ச என்னும் எழுத்தும்,-இடம்,கட்டம். பண்டம், பண்ண்டம் என்னும் நான்கிலும் ‘ட’ என்னும் எழுத்தும்,-மோதல், அத்தம், பந்தல், பந்ந்தல் என்னும் நான்கிலும் 'த' என்னும் எழுத்தும்,-பதம், அப்பம்,கம்பம் கம்ம்பம் என்னும் நான்கிலும் 'ப' என்னும் எழுத்தும், வெவ்வேறான நந்நான்கு ஒலிகளைப் பெறுவதுணரலாம். மற்றும் 'ஹ' என்னும் ஒலியை ஃஅ என்னும் கூட்டெழுத் தொலியாலும், r என்பதை'ட்ச என்பதாலும்,'ஷ'என் பதை‘ழ்ச என்பதாலும்,'ஜ' என்பதை “ஞ்ச என்பதாலும் “ஸ’ என்பதை 'ஃச (சரஸ்வதி = சரஃச்வதி) என்பதாலும், சரிக்கட்டலாம். மற்றும்,'F' என்பதை ஃப என்னும் கூட் டொலியால் (Africa = ஆஃபிரிக்கா) தமிழில் ஒலிக்கலாம் தமிழ் என்பதை 'Thamizh என ஆங்கிலத்தில் எழுதலாம். வேண்டுமானால் இவ்வெழுத்துகட்கு நேரான புது வரி வடிவங்களைத் தமிழில் உண்டாக்கிக் கொள்ளலாம். இவ் வாறாக, பெரும்பாலும், எந்த ஒரு மொழியின் எழுத் தொலியையும் வேறு எந்த ஒரு மொழியிலும் சரிக்கட்டிக் கொள்ளலாம்.

ஆங்காங்குள்ள தட்ப வெப்பம், பிற சூழ்நிலைகள், இவற்றால் உண்டான குரல் உறுப்பு ஒலி வேறுபாடுகள் முதலியவை காரணமாக, பல்வேறிடங்களில் வாழ்ந்த பல்வேறு மக்களிடையேபல்வேறு ஒலிக் குறியீடுகள் தோன் றின. எனவே, இந்த மொழியில் அந்த எழுத்து இல்லை -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/225&oldid=544881" இலிருந்து மீள்விக்கப்பட்டது