பக்கம்:உலகு உய்ய.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

அந்த மொழியில் இந்த எழுத்து இல்லை-என்பதாக நிறை குறை கூறிக்கொண்டிருப்பதில் ஒரு பயனும் இல்லை. இன் னின்ன ஒலித்தொகுதிக்கு இன்னின்ன பொருள் என்பதாகப் பாகுபாடு செய்து கொண்டும், அவற்றிற்கேற்ப வரிவடிவ எழுத்துக்களை அமைத்துக்கொண்டும் மக்கள் மொழி களைத் தோற்றி வளர்த்து வரலாயினர்.

பல்வேறு மொழிகள்:

இப்போது, போக்குவரவு ஊர்திகள், தொலைபேசி, தொலைக்காட்சி, செய்தித்தாள் முதலிய துணைகளால் உலகம் சுருங்கி நெருங்கியுள்ளது. வெவ்வேறிடங்களில் தொலைவில் உள்ள நாடுகள் பலவும், அண்டை வீட்டுக்கு அண்டை வீடுபோல் ஒன்றோடொன்று மிகவும் நெருங்கியுள்ளன. பண்டைக் காலத்தில் இந்த வாய்ப்பு இல்லை. ஒரிடத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி இன்னோ ரிடத்தில் வாழ்ந்த மக்களுக்கு ஒன்றும் தெரியாது. அமெரிக்கக் கண்டமே, இற்றைக்குச் (1980) சுமார் ஐந் நூறு ஆண்டுகட்கு முன்புதான் ஐரோப்பியரால் கண்டு பிடிக்கப்பட்டது. ஆத்திரேலியாவும், ஆப்பிரிக்க நாடுகள் பலவும் இன்னவே, கண்டு பிடிக்க வேண்டியவை இன்னும் உள்ளன.

இவ்வாறாக, மக்கள் வெவ்வேறிடங்களில் பிரிந்து வாழ்ந்ததால், ஆங்காங்கே, ஒன்றுக்கொன்று தொடர் பில்லாத பல்வேறு மொழிகள் தோன்றியிருந்தன. ஒரே மொழி மக்கள், சில காரணங்களால் வெவ்வேறிடங்கட்குப் பிரிந்து செல்ல, ஆங்காங்கிருந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு, அந்த ஒரே மொழி பல மொழிகளாகப் பிரிந்ததும் உண்டு. இதற்கு எடுத்துக்காட்டாக, சமசுகிருதத்தின் மூல மொழி

- 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/226&oldid=544882" இலிருந்து மீள்விக்கப்பட்டது