பக்கம்:உலகு உய்ய.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

யினையும் அதிலிருந்து பிரிந்த சமசுகிருதம், இந்தி, குச ராத்தி, மராத்தி, முதலிய மொழிகளையும் கூறலாம் ஆங்கிலமும் செர்மனியும் ஒரு மூலப் பொது மொழி, யிலிருந்து பிரிந்தனவாகச் சொல்லப்படுகின்றன. தமிழி லிருந்து, மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு, குடகு, கோண்டு, கோதம், கூ, கொங்கணி, தோடம் முதலிய மொழிகள் தோன்றின என்பதைத் தமிழர் அல்லாத மற்ற மொழியினர் ஒத்துக்கொள்ளாவிடினும், தமிழ் உட்பட இவ்வனைத்து மொழிகளும் ஒரே மூலப் பொதுமொழி யிலிருந்து தோன்றின என்பதையாவது அனைவரும் ஒத்துக் கொள்வர்.

மற்றும், ஒரு மொழியினர் பல இடங்களைப் பிடித்துக் கொண்டு ஆட்சி புரியுங்கால், தமது மொழியினை ஆங் காங்கு வேரூன்றச் செய்து விடுவர்; இதனால், ஆங்காங் கிருந்த மொழிகள் மறைய, வந்த புதுமொழி அம்மொழி கட்குள் புகுந்துகொண்டு சில மாறுதல்களுடன் பல மொழி களாகத் தோற்ற மெடுப்பதும் உண்டு. இதற்கு எடுத்துக் காட்டு வருமாறு:- .

கி.மு. முதல் நூற்றாண்டில் உரோமப் பேரரசு இத் தாலியில் நிலைகொண்டு, ஐரோப்பாவில் மேன்மேலும் பல நாடுகளை வென்று, ஆங்கெல்லாம் தன் ஆணையுடன் இலத்தீன் மொழியையும் பரப்பி நிலைபெறச் செய்தது. ஆங்கு வழங்கிய மொழிகளின் இடத்தை நூல் வழக்கிலே யன்றிப் பேச்சு வழக்கிலும் இலத்தீன் பிடித்துக் கொண் டது. நாளடைவில் இம்மொழி சிதைந்து பல்வேறு மொழி யுருவம் பெற்றது. இத்தாலியன், பிரெஞ்சு, ஸ்பானியம், போச்சுகீசியம், ருமேனியன் முதலிய மொழிகள் இலத்தி னின் சிதைவு மொழிகளே. அதனால் இம்மொழிகளை ரோமான்சு (Romance) அதாவது - ரோமன் மொழிகள்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/227&oldid=544883" இலிருந்து மீள்விக்கப்பட்டது