பக்கம்:உலகு உய்ய.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228

தமிழும் பழங் கன்னடமும் ஒத்திருப்பதைக் காணலாம். தமிழ்நாட்டின் முப்பெரும் பகுதிகளில் ஒன்றான சேரநாடு தான் இப்போது கேரள நாடாக மாறியுள்ளது. சேரநாட்

டில் வழங்கிய தமிழ், சமசுகிருதத்தின் மிகுதியான ஊடுரு வலால் மலையாளம்' என்னும் தனிமொழியாகப் பிரிந் தது. ஐரோப்பியர் சிலர் தமிழை மலபார் (மலையாள) மொழி என்னும் பெயரால் வழங்குவது ஈண்டு எண்ணத் தக்கது. மலையாளிகள் பலர், தமிழை மறந்து, மலை யாளம் சமசுகிருதத்திலிருந்து பிறந்தது என்று சொல்லும் அளவுக்குச் சமசுகிருதம் மலையாளத்தில் ஊடுருவியுள்ளது.

மொழிக் குடும்பங்கள்:

மேற்கூறியவாறு, ஒரு மூல மொழியும் அதிலிருந்து பிறந்த பல மொழிகளும், ஒரு மூல மொழியும் அதிலிருந்து சில சூழ்நிலைகளால் பிரிந்த பல மொழிகளும், ஒரு மூல மொழி திரிந்து வேற்று மொழியின் கலப்பினால் உருமாறி யதால் உண்டான பல மொழிகளும், தனித்தனியே ஒரு குடும்பம்’ என வழங்கப்படுகின்றன. திராவிட மொழிக் குடும்பம், சீனோ-திபேத்திய மொழிக் குடும்பம், சித்திய மொழிக் குடும்பம், இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் ஆஃபிரிக்க மொழிக் குடும்பம், அமெரிக்க மொழிக் குடும் பம் முதலியனவாகப் பல்வேறு மொழிக் குடும்பங்கள்

உள்ளன.

ஒரு குடும்ப மொழிகள் நாளடைவில் தமக்குள் பல் வேறு வகையான மாறுபாடுகள் பெற்றிருப்பினும், அவற் றின் அடிச்சொற்கள் பெரும்பாலும் ஒத்திருக்கும். நெருக் கம் குறைந்த ஒரு குடும்ப மொழிகளில் பெரும்பாலான வேர்ச் சொற்கள் ஒத்தில்லா விடினும், அப்பா-அம்மா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/229&oldid=544885" இலிருந்து மீள்விக்கப்பட்டது