பக்கம்:உலகு உய்ய.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

னன் பாடிய புறநானூற்றுப் பாடல் ஒன்றின் கருத் தாகும்.

“படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்

உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை யில்லோர்க்குப் பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே”. (188)

என்பது மன்னனது பாடல். இவ்வாறு இலக்கியச் செய்தி கள் பல காட்டலாம்.

இவ்வாறான பிள்ளையின்பத்தால் மிகுதியாகப் பிள் ளைகளைப் பெற்றுத் தள்ளியவர் பலர்.

தம் உடைமைகளைத் துய்க்கப் பிள்ளைகள் வேண்

டுமே என்று பெற்றவர் பலர்.

தம் உணவுக்காகப் பயிரிடுவதுபோல், தம்மை இறுதிக் காலத்தில் பேணிக்காப்பதற்காகப் பிள்ளைகளைப் பெற்ற வர். பலர்.

காட்டு விலங்கு முதலியவற்றின் தொல்லைகளிலி ருந்து தற்காத்துக் கொள்ளவும், உழவுத்தொழில் முதலிய வற்றை உடனிருந்து செய்யவும், எதிரிகளுடன் போரிட் டுத் தற்காத்துக் கொள்ளவும் ஆள் துணை - ஆள்வலு தேவை என்பதற்காகப் பிள்ளைகளை மிகுதியாகப் பெற் றவர் பலர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/23&oldid=544681" இலிருந்து மீள்விக்கப்பட்டது