பக்கம்:உலகு உய்ய.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

229

முதலியன போன்ற முறைப் பெயர்களும், ஒன்று-இரண்டு போன்ற எண்ணுப் பெயர்களும், இன்ன சிலவுமாயினும் ஒத்திருக்கும். இவ்வாறான ஒற்றுமைகளைக் கொண்டு ஒரு குடும்ப மொழிகளை அடையாளம் கண்டு கொள்ளலாம். இந்த அடிப்படையிலேயே உலகமொழிகள் மேற்கூறிய பல்வேறு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மொழி ஒப்பியல் ஆய்வு:

மொழிகள் பல குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மொழி ஒப்பியல் ஆராய்ச்சிகள் விரிவும் வளர்ச்சியும் அடைந்து வரலாயின. அறிஞர் பலர், மொழி கள் பலவற்றுக்கிடையேயுள்ள ஒப்புமைகளை ஆய்ந்து *Quot ys) SPLL?uugð" (Comparative Philology) BITG) G6ir LJgv வெளியிட்டுள்ளனர். அவற்றுள் ஒரிரண்டைக் குறிப்பிட லாம். சர். வில்லியம் ஜோன்சு (Sir William Jones) என்ப வர், சமசுகிருதத்துக்கும் ஐரோப்பிய மொழிகட்கும் இடை யேயுள்ள ஒப்புமையை ஆய்ந்து தமது படைப்பை கி.பி. 1786ஆம் ஆண்டில் வெளியிட்டார். கால்டுவெல் (Calwell) என்னும் அறிஞர், தென்னிந்தியத் திராவிட மொழி களின் இலக்கண ஒப்புமைகளை ஆராய்ந்து, திராவிட மொழிகளின் 9ilošarth' (Comparative Grammar of Dravidian Languages) atcírgolth 3/(UjibQu@ titam60L, படைத்து கி.பி. 1856-ஆம் ஆண்டில் வெளியிட்டார். இதற் காக இவர்க்கு, இங்கிலாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக் கழகம் டாக்டர்’ என்னும் சிறப்புப் பட்டம் அளித்துச் சிறப்பு பெற்றது.

தமிழ் இலத்தீன் பாலம்:

இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பமும் திராவிட மொழிக் குடும்பமும் தமக்குள் வேறானவை. இலத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/230&oldid=544886" இலிருந்து மீள்விக்கப்பட்டது