பக்கம்:உலகு உய்ய.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மொழி, இந்தோ-ஐரோப்பியக் குடும்ப மொழிகளுள் மிகவும் இன்றியமையாததாகும். தமிழ் மொழியோ, திரா விடக் குடும்ப மொழிகளின் தலைமை மொழியாகும். இரு வேறுபட்ட குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் மொழிக் கும் இலத்தீன் மொழிக்கும் இடையே ஒற்றுமையாக உள்ள அமைப்புகளையும் இலக்கண அமைதிகளையும் விளக்கி, ‘gop Qavāśār LTaulb’ (Bridge Between Tamill and Latin) என்னும் பெயரில் யான் ஓர் ஆய்வு நூல் எழுதி கி.பி. 1970 ஆம் ஆண்டு வெளியிட்டேன். (எனக்கு எந்தப் பட்டமும் கிடைத்திலது).

கீக்கர்ஸ் (B. Kieckers) என்னும் அறிஞர், உலகில் 176 உருப்படியான மொழிகள் உள்ளன என்றும், அவற்றுள் இருபது அல்லது முப்பது மொழிகள் இன்றியமையாத நாகரிக இனத்தைச் சேர்ந்தவை என்றும், அவற்றுள் பன்னி ரண்டு உலகம் அளாவிய மொழிகள் என்றும், அப்பன்னி ரண்டனுள் இந்தோ-ஐரோப்பிய மொழிகள் எட்டு என வும் கூறியுள்ளார். இவரது கருத்தின்படி நோக்கினும், உலகம் தழுவிய மொழிகள் பன்னிரண்டனுள் இந்தோஐரோப்பிய மொழிகள் எட்டுப் போக மீதி நான்கனுள் தமிழ்மொழி ஒன்று என்பது கொள்ளக் கிடக்கிறது. எனது ‘தமிழ் இலத்தீன் பாலம்’ என்னும் நூலிலிருந்து உய்த்துணர வேண்டியதாவது: உருப்படியான உலக மொழிகள் பலவும் ஒரளவாயினும் ஒத்திருக்கும் என்னும் செய்தியே யாகும். தமிழிலுள்ள இலக்கண விதிகள் சில, ஆங்கிலத் திலும் பிரெஞ்சிலுங்கூட ஒத்துள்ளன. அவற்றை யெல் லாம் ஈண்டு விரிப்பிற் பெருகு மாதலின் விடுப்பாம்.

உலகப் பொது மொழி:

முன் கூறியதுபோல், போக்குவரவு ஊர்திகள், தொலைபேசி, தொலைக் காட்சி, செய்தித் தாள், இன்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/231&oldid=544887" இலிருந்து மீள்விக்கப்பட்டது