பக்கம்:உலகு உய்ய.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234

ஆங்கில மொழிச் சீர்திருத்தம்:

எழுதுவதிலும் ஒலிப்பதிலுமாக ஆங்கில மொழியில் சில குறைபாடுகள் உள்ளன. ஆங்கில மொழியமைப்பில் உள்ள குறைபாடுகளை நீக்கிச் சீர்திருத்துவதற்காக, ஆங்கில மாமேதை பெர்னார்டு ஷா (Shaw, George Bernard: 1856-1950) அவர்கள் நிதி (Fund) வைத்துவிட்டுப் போயிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆங்கிலம் உலகப் பொது மொழியாக வேண்டும் எனில், அதனை உலக மக்கள் எளிதில் கற்பதற்கேற்ப, வேண்டிய சீர்திருத்தங் களைத் தொடர்புடைய அறிஞர்கள் செய்ய வேண்டியது மிகவும் இன்றியமையாததாகும்.

இலத்தீன் (ரோமன்) மொழியில் இல்லாத W என் னும் எழுத்தை விலக்கி விடலாம் என்ற கருத்து முன்பு சொல்லப் பட்டுள்ளது. காரணம், இவ்வெழுத்து பெரும் பாலும் ஒலி பெறாமையேயாகும். இலத்தீனின் நேர் வழி மொழியாகிய பிரெஞ்சிலும், இலத்தீனின் எழுத்துக்களை யும் சில கூறுகளையும் கடன் வாங்கியுள்ள ஆங்கிலத்தி லும், சில் சொற்களில் உள்ள சில எழுத்துக்கள் ஒலி பெறா ஊமை (Silent) எழுத்துக்களாயுள்ளன. சில எடுத்துக் காட்டுகள் வருக :

ஆங்கிலம்

சொல் : ஒலிப்பு ஒலிபெறா எழுத்துக்கள்:

Knowledge நாலட்ஜ் K-W-E (முதலிலும் இடை

லும் கடையிலும்)

Wrong ராங்க் W (முதலில்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/235&oldid=544891" இலிருந்து மீள்விக்கப்பட்டது