பக்கம்:உலகு உய்ய.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237

ரob=ஜாப் அல்லது ஜோப்-முதலியனவாகும். ஆனால் 'G என்னும் எழுத்தோ இரட்டைக் கோலம் புனைகிறது; அதாவது, சில சொற்களில் ககர ஒலியும் சில சொற்க ளில் ஜகர ஒலியும் பெறுகிறது; எடுத்துக்காட்டுகள்:Gain = @5uflair; Get = 0.5L-; God = #it L.; Gold = கோல்டு - முதலிய சொற்களில் 'G எழுத்து ககர ஒலி பெறுகிறது. George=ஜியார்ஜ்; Geometry=ஜியாமெட்ரி; General=ஜெனரல்; Gentle=ஜென்டில் - முதலிய சொற் களில் G என்னும் எழுத்து “ஜகர ஒலி பெறுகிறது. உலகத்தினர் இந்தக் குழப்பத்தினின்றும் தெளிவு பெற வேண்டுமே! இதற்குரிய வழியாவது G என்பதை ககர' ஒலி உடையதாகவே ஆக்கிவிட வேண்டும், ககர ஒலி பெறும் சொற்களி லெல்லாம் தொடர்ந்து நிலையாக G’ என்பதையே பயன்படுத்தி வர வேண்டும், G என்பது “ஜகர ஒலி பெறுஞ் சொற்களில் எல்லாம் G என்ப தற்குப் பதிலாக ‘1’ என்னும் எழுத்தையே பயன்படுத்த வேண்டும். அறிஞர்கள் இதை ஆராய்ந்து ஆவன செய் வார்களாக,

'G எழுத்துக்குக் ககர ஒலி தருவதால் மற்றும் ஓர் ஆதாயம் உள்ளது. சமசுகிருத மொழியில் க,ச,ட,த,ப என்னும் ஐந்து எழுத்துக்களும் தனித்தனியே நந்நான்கு ஒலி பெறும்- அந்த நந்நான்கிற்கும் தனித்தனியான வரி வடிவங்கள் உண்டு-என்னும் செய்தி முன்னர்க் கூறப்பட் டுள்ளது. க’ என்பது 'க' க்க', 'ங்க', 'ங்ங்க' - என்னும் நால்வகை அமைப்பு உடையது. மற்ற நான்கு எழுத்துக்களும் இவ்வாறேயாகும். சமசுகிருதம் போல நான்கு வகை வேண் டியதில்லை. க ‘ங்க’ என இருவகையே போதும். இதன் படி நோக்கின், ஆங்கிலத்தில் 'க' என்பதற்கு k என்னும் எழுத்தையும், ‘ங்க’ என்பதற்கு 'ே என்னும் எழுத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/238&oldid=544894" இலிருந்து மீள்விக்கப்பட்டது