பக்கம்:உலகு உய்ய.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

யும் ஈடாகப் பயன்படுத்தலாம். இது ஒர் ஆதாயமாகும். ஆங்கில நெடுங் கணக்கில் (எழுத்து வரிசையில்) உள்ள "P-B', 'T-D என்னும் இணைகளைப்போல K...G' என்பவற்றையும் ஒலி ஒப்புமையுடைய ஒர் இணையாக ஆக்கலாம். இதன் படி G என்னும் எழுத்தைத் தனியாக ஒலிக்கும்போது, முன்போல ஜி என ஒலிக்காமல், ங்கி

என்பது போல ஒலிக்க வேண்டும்.

இங்கே இன்னொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டி யுள்ளது. qualify= குவாலி..பை; quarter= குவார்ட்டர்; queen= (guilair; quick = guilji; Technique = QL-ša ili - என q என்னும் எழுத்து, சொற்களில் ககர (க) ஒலியே பெறுவதைக் காண்கிறோம். இதன் வேலையை 'kuarter=குவார்ட்டர்’ என K என்னும் எழுத்து செய்து ஈடு கட்ட முடியாதா? எனவே, q என்னும் எழுத்து ஆங்கிலத்துக்குக் கட்டாயம் தேவைதானோ? - என்பதை யும் அறிஞர்கள் ஆராய்ந்து பார்க்கவேண்டும்.

தமிழ் மொழியில் ஒர் எழுத்துக்கு ஒரே ஒலிதான் உண்டு; அவ்வாறே, ஓர் ஒலிக்கு ஒரே வரிவடிவமே உண்டு. எடுத்துக்காட்டு: 'உ' ஒலிக்கு 'உ' என்னும் ஒரே வடிவமே உண்டு; 'உ' என்னும் வரி வடிவத்துக்கு 'உ' என்னும் ஒரே ஒலியே உண்டு. ஆங்கில மொழியில் இவ்வாறில்லை; சில எழுத்துக்கள் இதனினும் மாறுபடுகின்றன. எடுத்துக் காட் டுகள்: a, e, i, 0, u, y, c, g, முதலிய எழுத்துக்களாகும்.

இலத்தீன் மொழியில் a, e, i, o, ப, y, என்னும் ஆறு உயிரெழுத்துக்கள் உள. ஆங்கில இலக்கணத்தில் y என் பதை உயிர் எழுத்தாகக் கூறாவிடினும், இவ்வெழுத்து, ஆங்கிலத்தில் மெய்யெழுத்தாகப் பயன்படுவதோடு உயி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/239&oldid=544895" இலிருந்து மீள்விக்கப்பட்டது