பக்கம்:உலகு உய்ய.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

பண்டு, கொள்ளை நோய், பிறநோய்கள், மருத்துவ வசதியின்மை போன்ற காரணங்களால், பத்துப் பிள்ளை கள் பெற்றால் இருவரோ மூவரோ நிலைப்பதே கடினமா யிருந்ததனால், போவது போக நிற்பது நிற்கட்டும் எனப் பிள்ளைகளைத் தொடர்ந்து பெற்றுக்கொண்டேயிருந்த வர்கள் பலர்.

பிள்ளைப் பேற்றின்போது தாயும் சேயும் இறந்து விடுவது பண்டு மிகுதியாய் நேர்ந்ததனால், மனைவியின் வாழ்நாள் காலத்துக்குள் இயன்றமட்டும் விரைந்துவிரைந்து மிகுதியாய்ப் பிள்ளைகளைப் பெற்று வைத்துக் கொள்வோம் என்ற எண்ணத்தால் பிள்ளைகளைப் பெற் றுக்கொண்டே யிருப்பதில் முனைப்புக் காட்டியவர் பலர்.

பிள்ளை பெறாவிடின் நரகமே கிடைக்கும்; புத்’ என் னும் நரகத்திலிருந்து மீட்கும் புத்திரர்கள் பிறந்தால் தான் நாம் நரகத்திற்குப் போகாமல் வீடுபேறு அடை வோம்; பிள்ளையிலாதாரைப் பாவிகள்’ என்றும், வீடு நிறையப் பிள்ளைகளைப் பெற்று வைத்திருப்பவர்களே புண்ணியவான்கள்’ என்றும் போற்றப் பெறுவர் - என்ற மூட நம்பிக்கையால் பிள்ளைப் பயிர் விளைவித்தவர் பலர்.

சமுதாயத்தில் தாம் சிறு பான்மையினரா யிருப்பதால் தம் சமூகத்தைப் பெருக்கவேண்டும் என்னும் நோக்கத் துடன் மிகுதியாகப் பிள்ளைகளைப் பெறுபவர்கள் பலர் .

காமப் பசியின் கொடுமையால் பிள்ளைகளை மிகுதி யாகச் சாகுபடி செய்பவர்கள் பலர். மிகுதியினால் 'சாகும் படி நேர்ந்துகொண்டிருப்பதும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/24&oldid=544682" இலிருந்து மீள்விக்கப்பட்டது