பக்கம்:உலகு உய்ய.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

239

ரெழுத்தாகவும் பயன்படுகிறது, yard- என்னும் சொல் லில் y என்பது ய் என்னும் மெய்யெழுத்தாயுள்ளது: என்பது இ என்னும் உயிரெழுத்தாகப் பயன்படுகிறது. a, e, i, o, u, - என்னும் ஐந்து உயிரெழுத்துகளும் ஒலி வடிவில் பல மாறுதல்கள் பெறுகின்றன. a என்பது, talk என்னும் சொல்லில் 'ஆ' எனவும், take என்னும் சொல்லில் ‘ஏ’ எனவும் ஒலிக்கப் படுகிறது. ‘e’ என்பது, dear என்பதில் இ’ ஒலியும், 'get' என்பதில் 'எ' ஒலியும் பெறுகிறது. i என்பது,'idea’ என்பதில் 'ஐ' ஒலியும், ill என்பதில் இ’ ஒலியும் பெறு கிறது. ‘0’ என்பது, god என்பதில் 'ஆ' ஒலியும், go’ என்பதில் ஒ' ஒலியும், good என்பதில் 'உ' ஒலியும் பெறு கிறது. 'u' என்பது, 'cut என்பதில் 'அ' ஒலியும், put என் பதில் 'உ' ஒலியும் பெறுகிறது.

3

'Copy' என்னும் சொல்லில் y

'c என்னும் மெய்யெழுத்து, cut என்னும் சொல் லில் 'க' ஒலியும், cell என்பதில் சகர (ச) ஒலியும், 'circular என்பதில் முதலில் ச' ஒலியும் இடையில் ககர' (க) ஒலியும் பெறுகிறது. cha என்னும் கூட்டமைப்பு, tcharity என்னும் சொல்லில் ச்ச என்னும் ஒலியும், 'character என்னும் சொல்லில் ககர (க) ஒலியும் பெறு &pg. ‘Accident’, ‘Vaccination' sigărgylb Qā is josiflá), முறையே ஆக்சிடென்ட்”, “வாக்சினேஷன்” - என முத லில் உள்ள c சகர (க) ஒலியும், அதன் பக்கத்திலே உள்ள இரண்டாவது c சகர (ச) ஒலியும் பெறுவது மிக வும் வியப்பாயிருக்கின்ற தன்றோ? g என்னும் மெய் யெழுத்து get என்பதில் 'ங்க" ஒலியும், general' என்ப தில் 'ஜ' ஒலியும் பெறுவது முன்னரே பேசப்பட்டுள்ளது. இவ்வாறு இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/240&oldid=544896" இலிருந்து மீள்விக்கப்பட்டது