பக்கம்:உலகு உய்ய.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

மேலே தந்துள்ள எடுத்துக் காட்டுகளில், ஒரே ஒலிக் குப் பல வரிவடிவங்களும், ஒரே வடிவத்துக்குப் பல ஒலி களும் அமைந்திருப்பதைக் காணலாம். உலகத்தார் குழப் பம் இன்றி எளிதில் கற்கவேண்டுமெனில், தமிழில் இருப் பது போலவே, ஓர் ஒலிக்கு ஒரே வரிவடிவமும், ஒரு வரி வடிவத்துக்கு ஒரே ஒலியும் அமையுமாறு,ஆங்கில மொழி யமைப்பைச் சீர்திருத்த வேண்டும், இது நிற்க.

ஒரே சொல்லையே ஒவ்வொருவர் ஒவ்வொரு மாதிரி யாக ஒலிப்பதும் உண்டு. பேச்சு மொழியில் இத்தகைய மாற்றம் ஏற்படுவது இயல்பே. ஆனால், வரிவடிவ எழுத்து மொழியைப் படிக்குங்கால் மாறுபடுவது கூடாதன்றோ? குழப்பம் தரும் அல்லவா? Admission என்னும் சொல்லை 'அட்மிஷன் எனச் சிலரும், எட்மிஷன்” எனச் சிலரும் ஒலிக்கின்றனர். Economics என்பதை, யீக்கனாமிக்ஸ் எனச் சிலரும், எக்கனாமிக்ஸ்’ எனச் சிலரும் ஒலிக்கின்ற னர், company' என்பதை, கம்பெனி' எனச் சிலரும் "கொம்பெனி' எனச்சிலரும், ஒலிக்கின்றனர். பிரெஞ்சில் ‘0’ என்னும் எழுத்தை எல்லா இடங்களிலுமே ஒ’ என்றே ஒலிக்க வேண்டும்.

கையெழுத்தும் அச்செழுத்தும்:

உரோமன் எழுத்தாகிய ஆங்கில எழுத்தமைப்பில் மற்றொரு வகைச் சீர்திருத்தமும் செய்யவேண்டியுள்ளது. தமிழ் மொழியிலும் இன்னும் பல மொழிகளிலும், கையெழுத்து-அச்செழுத்து, சிறிய எழுத்து-பெரிய எழுத்து என்ற வேறுபாடு இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் இந்த வேறுபாடு உண்டு. 'A' என்பதற்கு நான்கு வகை எழுத்து வடிவங்கள் உள்ளன. கையெழுத்தில் பெரிய எழுத்தை 'A எனவும், சிறிய எழுத்தை 'a' எனவும் எழுதுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/241&oldid=544897" இலிருந்து மீள்விக்கப்பட்டது