பக்கம்:உலகு உய்ய.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

gh என்பது -ஃப்-f என்னும் ஒலி பெறுகிறது; எனவே, ghoti' என்பதிலுள்ள “gh' என்பதை 'ஃப்-f' என எடுத் துக் கொண்டாராம் அவர்.Woman என்பது "விமன்’ என ஒலிக்கப் பெறும்; இங்கே ‘0’ என்பது இ-i என ஒலிக்கப் பெறுவதால், 'ghoti’ என்பதிலுள்ள ‘0’ என்பதை i: எனக் கொண்டு, 'gho என்பதை 'ஃபி-fi என அமைத் gJó G}5m’6àTl ITITIT Lb. Addition-Condition GL1fTóI pou ji) றின் இறுதியிலுள்ள tion என்பது 'ஷன்' என ஒலிக்கப் பெறும்; இதில் 'ti’ என்பது 'i-sh என்னும் ஒலி பெறுவதால், 'ghoti’ என்பதில் உள்ள "ti" என்பதை ஷsh’ எனக் கொண்டு, 'ghoti’ என்பதை 'ஃ பிஷ்-fish என ஒலிக்கலாம் என்று கூறிக் கேலி செய்தாராம்.

மற்றும் ஒன்று:- ஆங்கில எழுத்து நெடுங்கணக்கில், குறிலுக்கும் நெடிலுக்கும் தனித்தனி எழுத்துகள் இல்லை. குறிலினும் நெடிலுக்கு வேற்றுமை காட்டக் குறிலுக்கு மேலோ-கீழோ சில குறியீடுகள் இடப்படுகின்றன. இஃதும் ஒரு வகைக் குழப்பமே. Art என்பதில் A என்னும் ஒர் உயிரே உள்ளது. இதை அ என ஒலிப்பதா அல்லது ஆ என ஒலிப்பதா? இப்போது இது ஆர்ட் என நெடிலாக ஒலிக்கப்படுகிறது. Aart என இரண்டு A போட்டு நெடி லாக ஒலிப்பது எளிமையாயிருக்கும். மற்ற உயிர் எழுத்து களிலும் குறிலுக்கு ஒர் எழுத்தும் நெடிலுக்கு ஈரெழுத்தும் பயன்படுத்துவது நல்லது.

எனவே, ஒலிப்பு முறையில் மேற்கூறிய குழப்பங்கட்கு இடம் இல்லாதவாறு, தொடர்புடைய அறிஞர்கள் ஆங் கில மொழியமைப்பைச் சீர்திருத்த வேண்டும். மொழி யியலாரின் ஒத்துழைப்பு இதற்கு மிகவும் வேண்டற்பாலது. இங்கே, ஆங்கில மொழியைச் சீர்திருத்துவதற்காக நிதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/243&oldid=544899" இலிருந்து மீள்விக்கப்பட்டது