பக்கம்:உலகு உய்ய.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

243

(Fund) வைத்துப் போன பெர்னார்டுஷா அவர்களின் கருத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இலக்கண அமைதி:

ஆங்கிலம் உலகப் பொதுமொழியானால், உலக மக்கள் அனைவரும் குழப்பம் இன்றி எளிமையாகக் கற்றுக் கொள்ளும் வகையில் அம்மொழி யிருக்கவேண்டும் என்ப தற்காக, மேற்கூறிய குறைபாடுகட்கு இடமின்றி மொழி யைச் சீர்த்திருத்தி யமைக்க வேண்டும் என்னும் கருத்து மேலே தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு ஆங்கிலம் உலக மக்கள் அனைவராலும் கையாளப் படுங்கால், ஒரு மூலைக்கு ஒரு மூலை கையாளுவதில் வேற்றுமை யுண்டாக, அதனால் மொழி பலவாறு சிதைந்து பிரியக் கூடுமே என்ற ஐயம் சிலர்க்கு எழலாம். இவ்வாறு நேராது காப்பதற்கு உரிய சிறந்த வழியாவது, தகுந்த இலக்கணம் அமைத்து, அந்த இலக்கண விதிகளை உலக மக்கள் அனைவரும் பின்பற்றுமாறு செய்வதுதான்!

பேச்சு வழக்கில் எந்த ஒரு மொழியும் ஒரு மூலைக்கு ஒரு மூல்ை மாறுபடத்தான் செய்யும்; இது இயற் கையே! சென்னைத் தமிழன் பேசும் தமிழ் வழக்கும், திருநெல்வேலித் தமிழன் பேசும் தமிழ் வழக்கும், இலங்கை-யாழ்ப்பாணத்துத் தமிழன் பேசும் தமிழ் வழக்காறும் ஒன்றுக் கொன்று மாறுபடலாம்; சில கூறு கள் ஒருவர்க்கு ஒருவர் புரிந்து கொள்ள முடியாமலும் இருக்கலாம். ஆனால், எல்லா இடங்களிலும் உள்ள-கற்ற றிந்த தமிழ் மக்கள் எழுதும் எழுத்து நடையை எல்லாரும் எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு உரிய கார ணம் என்ன? அனைவருமே குறிப்பிட்ட இலக்கண விதிக ளைப் பின்பற்றி எழுதுவதால், எழுத்து நடையில் மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/244&oldid=544900" இலிருந்து மீள்விக்கப்பட்டது