பக்கம்:உலகு உய்ய.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246

பேச்சு வடிவத் தமிழ்ச் சொற்கள், மலையாளத்தில் இலக்கிய வடிவச் சொற்களாயின என்னும் உண்மை புல னாகும். இத்தகைய பேச்சு வடிவக் கொச்சைத் தமிழ்ச் சொற்கள் பல, தெலுங்கிலும் கன்னடத்திலுங்கூட இலக் கிய வடிவச் சொற்களாயுள்ளமை ஈண்டு ஒப்பு நோக்கற் பாற்று.

உண்மை யில்வாறிருக்க, பேசுவது போல் எழுத வேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர்-செய்தும் வருகின் றனர். அங்ங்ணமாயின், யார் பேசுவது போல் எழுத வேண்டும்? சென்னைத் தமிழன் பேசுவது போலவா-திரு நெல்வேலித் தமிழன் பேசுவது போலவா-யாழ்ப்பாணத் தமிழன் பேசுவது போலவா..இன்னும் யார் பேசுவது போல் எழுதவேண்டும்? அவரவரும் அவரவர் பேசுவது போல் எழுதத் தொடங்கினால், அவரவருடைய மாறு பட்ட பேச்சு வடிவங்கள் தனித்தனி மொழியாக மாறிப் பிரியும். இது மிகப் பெரிய கொடுஞ் செயலாகும்.

எனவே, குறிப்பிட்ட இலக்கண விதி மரபை உலகினர் அனைவரும் பின்பற்றி ஆங்கில மொழியைக் கையாண் டால், அம்மொழி, ஒரு மூலைக்கு ஒரு மூலை வேறு மொழி கள் போல் சிதைந்து பிரிய வழியிராது. இதனைத் தொடர்புடையவர்கள் கவனித்து ஆவன புரிய வேண்டும். மேலே பரிந்துரைக்கப் பட்டுள்ள செப்பமான சீர்திருத்தங் களாலும் இலக்கண அமைதியாலும், ஆங்கில மொழியை உலக மக்கள் அனைவரும் எளிதில் கற்க வியலும்.

ஆகவே மக்களினம், உலகின் பொது மொழியாகப் பழக் கத்தில் உள்ள ஆங்கிலத்தைக் கட்டாயம் கற்று வாழ்க் கையைஎளிமைப் ப்டுத்திக்கொள்வதே உய்யும் வழியாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/247&oldid=544903" இலிருந்து மீள்விக்கப்பட்டது