பக்கம்:உலகு உய்ய.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

பழைய கொள்கையே:

ஒரே உலக அரசு அமைய வேண்டுமாயின், உலக முழு வதுக்கும் ஒரே நாடாளும் சட்டமன்றம் (Parliament) ஒரே மாதிரியான சட்ட திட்டங்கள், இன்னபிற உருவாக வேண்டும். இது மாதிரியான கருத்து பழமையானதே. கிரேக்கர் - உரோமர் கதைகளில் இது மாதிரியான கருத்து பண்டே சொல்லப்பட்டுள்ளதாம். பண்டைய இந்தியா, பண்டைய சீனா போன்ற நாடுகளில் பல உட்பிரிவுகள் இருந்தும் ஒரே உலக அமைப்பு போன்ற ஆட்சி - அதா வது, ஒரே இந்தியா - ஒரே சீனா போன்ற அமைப்பு இருந் துள்ளது. இப்போதும் இருப்பது உலகம் அறிந்ததே. கிரேக்க நாட்டு நகர ஆட்சிகளும் ஒரே அமைப்பாய்ப் பண்டு இருந்ததுண்டாம். இது மாதிரியான அமைப்பு உலக முழுதும் பரவின் உலகுக்கு ஒரே அரசு உருவாகும்.

பண்டைத் தமிழரின் பங்கு:

இந்தியாவில் - தமிழ்நாட்டில் ஒரே உலகக் கோட்பாடு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே உருவாகியிருந்தது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே, கணியன் பூங்குன்றனார் என்னும் தமிழ்ப் புலவர், புறநானூற்றுப் பாடல் ஒன்றில்,

'யாதும் ஊரே யாவரும் கேளிர்” (192)

என்று கூறியுள்ளார். எல்லாருக்கும் எல்லாம் சொந்த ஊரே - எல்லாருக்கும் எல்லாரும் உறவினரே என்பது இதன் கருத்து. கற்றவர்க்கு எல்லா நாடும் சொந்த நாடா கும் - எல்லா ஊரும் சொந்த ஊராகும் எனத் திருவள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ளார்: -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/249&oldid=544905" இலிருந்து மீள்விக்கப்பட்டது