பக்கம்:உலகு உய்ய.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

செல்வச் செழிப்பு உள்ள நாடுகள் செல்வத்தைத் துய்க் கவும் ஆள் வலு வேண்டியும் பிள்ளைகளைப் பெற ஊக்கம் அளிப்பதால் அத்தகைய நாடுகளில் பிள்ளைப் பேறு மிகு வதும் உண்டு.

சில நாடுகளில் அலுவலாளர்க்கு பஞ்சப் படி (Dear ness Allowance), ‘est’ul-G) ou TL605Ú Lų.” (House Rent Allowance) முதலியன கொடுக்கப் படுவதுபோல, சில நாடு களில் பிள்ளைப் படி (Charge de Famille) கொடுப்பதும் உண்டு. பிரான்சு (France) போன்ற சில நாடுகளில், பிறக் கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் இவ்வளவு பணம் எனப் பிள்ளைப் படி கொடுக்கப்படுகிறது. சுவீடன் (Sweden) நாட்டில் பிள்ளை பெற ஊக்குவிப்பு நடைபெறுவதாக ஓர் இதழில் (பத்திரிகையில்) படித்திருக்கிறேன். அச் செய்தி வருமாறு: சுவீடனில் செல்வச் செழிப்பு மிகுதி; மக்கள் குறைவு; எனவே, பிள்ளை பெறுவோர்க்கு நிரம்பப் படி’ (Allowance) கொடுக்கப்படுகிறது. திருமணம் ஆகாதவர்கள் வேறு வழியில் பிள்ளை பெற்றாலும் படி தரப்படுகிறது. இதில் ஒரு வியப்பு என்னவெனில், திருமணம் ஆகிப் பிள்ளை பெறுவோர்க்குத் தரும் படியை விட, திருமணம் செய்துகொள்ளாமல் வேறு வழியில் பிள்ளை பெறு வோர்க்கு அளிக்கும் பிள்ளைப் படியின் அளவு மிகுதியாம். எப்படியாவது நாட்டில் பிள்ளைகள் நிரம்பப் பிறந்தால் போதும் என அரசு ஊக்கம் அளிப்பது இதனால் புலனா கிறது. இதில் இன்னும் ஒரு வியப்பு என்னவெனில், திரு மணம் செய்து கொண்டு முறையாகப் பிள்ளை பெறுபவர் களும் தாங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் பிள்ளை பெற்றதாகக் கூறி மிகுதியான பிள்ளைப் படியைப் பெறு வது உண்டாம். இச்செய்திகள், சில ஆண்டுகட்கு முன் ஒர் இதழிலிருந்து யான் படித்து அறிந்தவை. சுவீடன் நாட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/25&oldid=544683" இலிருந்து மீள்விக்கப்பட்டது