பக்கம்:உலகு உய்ய.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

உலகப் பொது மறை:

உலகம் முழுவதையும் - உலக மக்கள் அனைவரையும் மையமாகக் கொண்டே திருவள்ளுவர் தமது திருக் குறள் நூலை இயற்றியுள்ளார். இந்நூல் சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளது. இதனாலும் இதன் பொதுமைக் கருத்தினாலும், இந்நூல், உலகப் பொது மறை எனப் போற்றப்படுகிறது. இதற்கேற்ப, ஆயிரத்து முந்நூற்று முப்பது (1330) பாடல்கள் கொண்ட இந்நூலில், சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பாடல்களில், உலகு என்னும் சொல்லும் அதே பொருளுடைய வையம் முதலாய சொற்களும் இடம் பெற்றுள்ளன. அப்பாடல்களின் எண் கள் வருமாறு:

1, 11, 13, 19, 20, 22, 23, 27, 50, 58, 101, 117, 140 149, 211, 215, 222, 233, 234, 238, 243, 247, 256, 280 290, 294, 336, 346, 374, 387, 389, 399, 425, 426, 470 520, 533, 542, 544, 547, 571, 572, 578, 598, 612, 701 809, 841, 850, 874, 970, 994, 996, 1015, 1025, 1031 1032, 1055, 1062, 1198-முதலிய எண்கள் கொண்ட பாடல் களில், உலகு என்ற சொல்லும் அதே பொருளுடைய சொற்களும் அமைந்து, பொதுவாக உலகத்துக்குச் செய்தி - யறிவிப்பதைக் காணலாம். இந்த உண்மையை உணர்ந்தே சுப்பிரமணிய பாரதியார், 2

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்று பாடியிருக்கும் நுட்பம், நினைந்து - நினைந்து சுவைத்தற் குரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/251&oldid=544907" இலிருந்து மீள்விக்கப்பட்டது