பக்கம்:உலகு உய்ய.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256

ஆமெரிக்க ரேடியோ தந்தி புகைப்படம் (U.S. Signal corps Radio Telephoto), Qirar top Qasrī)0pt if களைக் காணலாம். இதனால் அறியப் படுவதாவது: புகைப் படங்கள், தந்தி வாயிலாகவும், ரேடியோ வாயி லாகவும், சுமார் பத்தாயிரம் கல் (மைல்) தொலைவுக்கு அப்பால் உள்ள நாடுகட்கும் சுமார் பத்தே மணித் துளி களில் (நிமிடங்களில்), புதிய பொறிகளின் துணை கொண்டு அனுப்பப்படுகின்றன - என்பதாகும். எனவே, உலகம் இப்போது மிகவும் நெருங்கி யுள்ளமை புலனாகும். மற் றும், இப்போது செயற்கைக் கோள்களின் வாயிலாக, ஒரே நேரத்தில் பல்வேறிடங்கட்கும் ஒலியும் ஒளியும் கிடைப்பது ஈண்டு குறிப்பிடத் தக்கது. செயற்கைத் தடைகள்:

இவ்வாறு இயற்கைத் தடைகள் நீங்கியும், செயற்கை யான மனத் தடை இன்னும் நீங்க வில்லை. சாதி, மதம் மொழி, நிறம், நாட்டுப் பற்று, பழக்க வழக்கப் பண்பாட்டு முறை, வாணிக நோக்கு, பணப் பற்று முத வியன, உலக மக்கள் ஒன்றுபட இடம்தராத செயற்கைத் தடைகள் ஆகும். பரந்த விரிந்த மனப்பான்மையால் மக்களினம் இந்தத் தடைகளை வெல்ல வேண்டும். பண்டு யாரும் எங்கும் போகலாம், இன்று அவ்வாறு இயலாது. உலக நாடுகள் பலவற்றின் மேலும் பறந்து செல்லும் பறவைகட்கு உள்ள உரிமை இன்று மக்கட்கு இல்லை. மக்கள் நாடு விட்டு நாடு செல்ல வேண்டுமெனில், பயண இசைவுச் சீட்டு (pass port), நுழைவு உரிமைச் சான்று (wisa) ஆகியவை பெறவேண்டும். கூட்டாட்சி முறை:

உலகுக்கு ஒரே அரசு அமைக்கப் படிப்படியான முயற்சிகள் மேற்கொள்ளலாம் என்பது சிலரது கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/257&oldid=544913" இலிருந்து மீள்விக்கப்பட்டது