பக்கம்:உலகு உய்ய.pdf/258

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257

உலகைப் பல மண்டலங்களாகப் பிரிக்க வேண்டும்; ஒவ் வொரு மண்டலத்திலும் பல நாடுகள் இருக்க வேண்டும்; ஒவ்வொரு மண்டலமும் ஒரு கூட்டாட்சியால் ஆளப்பட வேண்டும்; பின்னர்ப் படிப்படியாகப் பல மண்டலங்கட் கும் ஒரு பொது ஆட்சி நிறுவலாம் - என்பது ஒரு வகை யான முயற்சி. குறிப்பிட்ட நாடுகள் ஒரு மண்டலத்தில் சேர்வது அரிது - சேர்ந்தாலும் பின்னர்ப் பிரிந்து விடும் - எனவே இந்த முறை வெற்றி தராது - என்பது சிலரது கருத்து.

ஒட்டும் பேச்சு:

கூட்டாட்சி முறை வெற்றி தரும் என்பவர் சில எடுத் துக்காட்டுகள் தரலாம். இந்திய ஒன்றியம் (Indian union), @gir fólu 9 Qun fläs IF TG56ỉr (U.S.A. -- United states of America), சோவியத் சோஷலிசக் குடியரசு ஒன்றியம் (Taihuit) (U.S.S.R-Union of Soviet Socialist Republics). முதலிய அமைப்புகள் கூட்டாட்சிக் கொள்கையினருக்கு உரிய சான்றுகளாகும். ஐரோப்பியரின் வருகைக்கு முன், இந்தியாவில் சுமார் அறுநூறுக்கும் மேற்பட்ட அரசுகள் இருந்தன. இன்று எல்லாம் ஒன்றாகி ஒரே நாடாய்த் திகழ்வதைக் காணலாம். U.S.A. எனப்படும் அமெரிக்க ஒன்றியத்தில் முதலில் பதின் மூன்று நாடுகளே இருந்தன; பின்னர், மேலும் முப்பத்தைந்து நாடுகள் சேர்ந்து நாற் பத்தெட்டு நாடுகளின் ஒன்றியமாயிற்று; இப்போது மேலும் இரண்டு சேர ஒன்றியத்தில் ஐம்பது நாடுகள் உள்ளன. இதே போல, ரஷ்யா, சீனா ஆகியவையும், சிறு துளி பெரு வெள்ளம்’ என்பது போல், பல நாடுகள் சேர்ந்த பெரிய ஒன்றியங்கள் ஆகும். மற்றும், கிரேட்

– 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/258&oldid=544914" இலிருந்து மீள்விக்கப்பட்டது