பக்கம்:உலகு உய்ய.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

பிரிட்டனின் முடியரசு ஒன்றியத்தில் (U.K. -- united kingdom) இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து, வட அயர் லாந்து ஆகியவை உள்ளன. இன்ன பிற அமைப்புகள்,

கூட்டாட்சிக் கொள்கையினர்க்கு உரிய சான்றுகளாகும்.

வெட்டும் பேச்சு:

கூட்டாட்சி முறை வெற்றி தராது என்பவரும் சில எடுத்துக் காட்டுகள் தரலாம்: கிரேட் பிரிட்டனின் முடி யரசு ஒன்றியத்திலிருந்து (U.K.) தென் அயர்லாந்து பிரிந்தமை ஒரு சான்று. எகிப்து, வேறு சில நாடுகளுடன் சேர்ந்து ஐக்கிய அரபுக் குடியரசு’ என்னும் பெயருடன் சிறிது காலம் இருந்தது. பின்னர் எகிப்திலிருந்து சிரியா பிரிந்து விட்டது; சூடான் முன்னமேயே பிரிந்துவிட்டது. இப்போது எகிப்து தனியாயிருக்கிறது. மலாய், சிங்கப்பூர் சாரவாக், போர்னியோவின் ஒரு பகுதி ஆகியவை மலே சியா (Malasia) என்னும் பெயரில் ஒர் ஒன்றியம் ஆயின; பின்னர் இந்த ஒன்றியத்திலிருந்து சிங்கப்பூர் பிரிந்து விட்டது. இவ்வாறாகக் கூட்டாட்சி முறையைச் சிலர் வெட்டிப் பேசுகின்றனர்.

பிரிவது இயற்கையே:

பொதுவாகப் பிரிவதே உலக இயற்கையா யுள்ளது. ஒரு பெரிய குடும்பத்தில் ஒன்றி வாழ்ந்த உடன் பிறந்தார் கள், பின்னர்த் தனித்தனிக் குடும்பத்தினராய், பிரிந்து விடுவதைக் காண்கிறோம். பெற்றோர் பிள்ளைகட் கிடையே பிரிவு - கணவன் மனைவியர்க் கிடையே பிரிவு - உடன் பிறந்தார்க்கிடையே பிரிவு - உறவினர்க்கிடையே பிரிவு - நண்பர்கட்கிடையே பிரிவு - இரு தெருவார்க் கிடையே பிரிவு - இரண்டு ஊரார்கட்கிடையே பிரிவு. இரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/259&oldid=544915" இலிருந்து மீள்விக்கப்பட்டது