பக்கம்:உலகு உய்ய.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25

டில் இப்போது நடைமுறை எப்படி உள்ளதென யான் அறியேன். இச் செய்திகளில் ஏதேனும் தவறான கூறு இருக்குமாயின், சுவீடன் அரசும் மக்களும் என்னைப்

பொறுத்தருள வேண்டும்.

வளமுள்ள சுவீடன் போன்ற நாடுகட்கு இது பொருந் தலாம். இருக்கும் வளத்திற்குமேல் மக்கள் தொகை மிகுதி யாயுள்ள இந்தியா போன்ற நாடுகட்கு இது பொருந்தாது. இந்தியாவிலும் மக்கள் தொகை குறைவாக இருந்த அந்தக் காலத்தில், மிகுதியான பிள்ளைப் பேற்றுக்கு யாரும் தடை சொன்னதில்லை. இப்போது வளம் மிகுந்துள்ள நாடுகளும் பிள்ளைப் பேற்றைப் பெருக்கிக்கொண்டு போனால் பின் னர் ஒரு காலத்தில் இந்தியாவினது போன்ற நிலையை அடைய வேண்டியிருக்கும்.

வேண்டும் காரணங்கள்:

பிள்ளைப் பேற்றைக் குறைக்கக்கூடாது என்போர் கூறும் காரணங்கள் இந்தக் காலத்தில் எளிதில் மறுக்கத் தக்கனவே. முதல் காரணம்: பிள்ளைப் பேறு கடவுளின் செயல்-கடவுளின் அருள் - எனவே, கடவுளின் செயலுக்கு மாறாகச் செயற்கை முறையில் தடை செய்யலாகாது என்பது சிலரது எதிர்ப்பு. பிள்ளைப் பேறு கடவுளின் செய லன்று; மக்களின் செயலேயாகும். கடவுளின் செயல் எனில் மாந்தரால் மருத்துவ வசதி கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலத்தில், பிறந்த பிள்ளைகளுள் பெரும்பாலோரைக் குழந்தைப் பருவத்திலேயே கடவுள் சாகடித்து வந்தது ஏன்? விரைவில் இறக்கப் போகும் குழந்தைகளைப் பிறப் பித்த வீண்வேலை எதற்கு? பிறப்பித்த எல்லாக் குழந் தைகட்கும் போதுமான வயதும் உண்டி உடை உறையுள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/26&oldid=544684" இலிருந்து மீள்விக்கப்பட்டது