பக்கம்:உலகு உய்ய.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260

வின் துணையுடன் சில நாடுகளும், ரஷ்யாவின் துணை யுடன் கம்யூனிஸ்ட் நாடுகள் சிலவும் இருந்துகொண்டு ‘மண்டலச் சார்பு உள்ள நாடுகள்’ என்னும் பெயருக்கு உரியனவாயுள்ளன. தென் கிழக்கு ஆசிய ஒப்பந்த நாடு 36ir' (@L' GLT =SEATO=South East Asian Treaty organization) என்னும் பெயருடன் சில நாடுகளும், வட அட் லாண்டிக் ஒப்பந்த நாடுகள் (நாட்டோ=NATO=North Atlantic Treaty Organization) GT6örgyib @Lu(5–6ör stav நாடுகளும், வார்சா ஒப்பந்த நாடுகள், என்னும் பெயருடன் சில நாடுகளும் இணைந்து மண்டலச் சார்பு உடையவை என்னும் பெயர் பெற்றன. பாக்தாத் (Baghdad) ஒப்பந்த நாடுகள்’ என்னும் பெயரில் சில நாடுகள் இணைந்ததும் உண்டு.

மற்றும், மண்டலச் சார்புஇல்லாமலேயே, இந்தோனேசி யாவில்- ஜாவாத் தீவில் உள்ளதான பாண்டுங் (Bandung) என்னும் பெரிய நகரத்தில் 1955 ஏப்ரலில் முதல் ஆசிய - ஆப்பிரிக்கா நாடுகளின் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட நாடுகள் பாண்டுங் நாடுகள்’ எனப்படுவதுண்டு.

1950 ஆம் ஆண்டில், இலங்கையின் தலைநகரான கொழும்புவில், தெற்கு - தென் கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உரிய திட்டம் வகுப் பதற்காகச் சில நாடுகள் கூடி மாநாடு நடத்தின - திட்டம் தீட்டின. இத்திட்டம் கொழும்புத்திட்டம்’ எனப்படும். இதில் தொடர்புடைய நாடுகள் கொழும்பு நாடுகள்: எனப்படுவதுண்டு.

மண்டலச் சார்பு அற்ற நாடுகள் பல கூடி மாநாடு நடத்துவதும் உண்டு. 1981 பிப்ரவரியில் இது (Non

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/261&oldid=544917" இலிருந்து மீள்விக்கப்பட்டது