பக்கம்:உலகு உய்ய.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261

Alignment conference) QË Gurroosi 560–0LÄ Dgl. udfö றும், 1983-ஆம் ஆண்டு, இந்தியாவின் தலைநகரான டெல்லியில், இந்தியத் தலைமையமைச்சராயிருந்த திருமதி இந்திரா காந்தியவர்களின் தலைமையில் கூட்டு சேரா நாடுகளின் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில், கூட்டு சேரா நாடுகளின் தலைமை நாடாக இந்தியா தேர்ந் தெடுக்கப் பெற்றது. ஒருவகையில் பார்க்கப்போனால், ‘மண்டலச் சார்பு அற்ற நாடுகளின் இயக்கம் - கூட்டு என் பது, ஒருவகை மண்டலச்சார்பு ஆக ஆகிவிடும் போலும்!

இணைவதும் இயற்கையே:

பிரிவதே இயற்கையெனினும், கட்டாயத் தேவை ஏற்படும்போது இணைவதும் இயற்கையே! மண்டலச் சார்பு, கூட்டு மாநாடு ஆகியவை இதற்குச் சான்றாகும். புலியோ - சிங்கமோ தாக்க வரின், ஊரார் அனைவரும் ஒன்று கூடி அந்தப் பொது எதிரியைத் தாக்குகின்றனர். வறட்சி - பெருமழை - வெள்ளம் . புயல் - தீ - எரிமலை நிலநடுக்கம் - கொள்ளைநோய் - இன்ன பிற இயற்கையின் கொடுமைகளால் - கோளாறுகளால், உலகின் ஒரு பகுதி யில் அழிவு ஏற்படின், உலகின் மற்ற பகுதியினர் வரிந்து கட்டிக்கொண்டு உதவுவதைக் காண்கிறோம். ஒருவர் வீட்டுச் சாவு வாழ்வு நிகழ்ச்சிகளில் உறவினரும் நண்பரும் பங்கு கொள்வது போல, ஒரு நாட்டின் இன்ப துன்பங் களில் உலகின் மற்ற நாடுகளும் பங்கு கொள்ளும் நிலைமை இன்று வளர்ந்து வருவதைக் காண்கின்றோம். இத்தகைய ஒற்றுமை உணர்வுக்கிடையே வேற்றுமை யுணர்வும் பெருகிவருவது வேதனையாகும். வல்லரசுகள் மனம் வைத்தால் - வல்லரசுகள் ஒன்று பட்டால், உலகில் பிரிவினை யின்றியும் போர் இன்றியும் மக்களினம் அமைதி யாய் வாழ முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/262&oldid=544918" இலிருந்து மீள்விக்கப்பட்டது