பக்கம்:உலகு உய்ய.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

தனித்து வாழ முடியாது:

இந்தக் காலத்தில் எந்த வல்லரசுங்கூட வேறொரு நாட்டின் உதவியின்றித் தனித்து வாழமுடியாது. உலக நாடுகள் ஒன்றையொன்று சார்ந்தே வாழவேண்டிய நிலையில் உள்ளன. எந்த வல்லரசும் தன்னிடம் இல்லாத பொருளை இன்னொரு நாட்டிலிருந்து பெறவேண்டியுள் ளது. ஒரு நாட்டின் இன்ப - துன்பங்கள் மற்ற நாடுகளை யும் தாக்குகின்றன. ஈரான், ஈராக் ஆகிய நாடுகளிலிருந்து எண்ணெய் பெற்று வந்த நாடுகள், ஈரான் - ஈராக் போரி னால் எண்ணெய்த் தட்டுப்பாடு உடையவையாயுள்ளன. மற்றுமோர் அருமையான எடுத்துக்காட்டு வருமாறு: ஒரு சமயம் ஜப்பான் நாட்டில் உள்ள ஒரு பட்டுத் தொழிற் சாலையில் தீப்பற்றிக் கொண்டது. அங்கே தீப் பற்றிய இருபது மணித்துளிகளுக்குள் (நிமிடங்களுக்குள்) அமெரிக்க நியூயார்க் நகரில் உள்ள வாணிக நிலையங்களில் பட்டின் விலை ஏறத்தொடங்கிவிட்டது. இவ்வாறு இன்னும் எண் னிறந்த எடுத்துக்காட்டுகள் தரலாம். எனவே, உலக நாடு கள் ஒன்றி வாழ வேண்டியனவா யுள்ளன.

முதல் உலக ஒற்றுமைக் கழகம்:

இரண்டாவது உலகப் பெரும் போருக்குப் பிறகு ஐக் §u som ()āoffair ##15th’ (United Nations Organization) என்னும் அமைப்பு உருவாகி இப்போது இருந்து கொண் டுள்ளது. இதனைத் தமிழில் சுருக்கமாக ஐ.நா. என்றும், ஆங்கிலத்தில் சுருக்கமாக U.N.O.’ என்றும் வழங்குவர். இந்த வகையில் இது இரண்டாவது அமைப்பேயாகும். இதற்கு முன்பே இது போன்றதோர் அமைப்பு இருந்தது. அதன் வரலாறு சுருக்கமாக வருமாறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/263&oldid=544919" இலிருந்து மீள்விக்கப்பட்டது