பக்கம்:உலகு உய்ய.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

263

முதல் உலகப்போர் 1914 சூலை 28 ஆம்நாள் தொடங்கி, 1918 நவம்பர் 11 ஆம் நாள்வரை நிகழ்ந்தது. 'கண் கெட்டபின் ஞாயிறு வணக்கம்’ ‘திருட்டுப் போன பின் அறைக்குப் பூட்டு’ என்ற முறையில் பல்வேறு பெரிய இழப்புகட்குப் பின்னர், 1919 சனவரி 18 ஆம் நாள் பாரி சில் அமைதிப் பேச்சு தொடங்கியது. அமெரிக்கக் குடியர சுத் தலைவராயிருந்த வுட்ரோ வில்சன்(Woodrow Wilson) உலக அமைதிக்குப் பெரிதும் பாடுபட்டார். பிரான்சில் பாரிசுக்குத் தென்மேற்கில் சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள வெர்செல்ஸ் (Versailles) என்னும் நகரில் உள்ள கோட்டையின் கண்ணாடிக் கூடத்தில் (Hall of Mirrors), 1919 சூன் 28 ஆம் நாள், பகை நாடுகட்கிடையே அமைதி உடன்படிக்கை கையெழுத்தாகியது. இதற்கு வெர்செல்ஸ் 2 Lai Liq à oð,’ (Treaty of Versailles) argård), @Lugmob. இதைத் தொடர்ந்து உலகப் பெரியார்கள் கூடி,"உலகநாடு g6i6ör @fò papuoż Gypsib” (The League of Nations) argir னும் அமைப்பை உருவாக்கினர். இதில் பெரும்பங்கு கொண்டிருந்த அமெரிக்கத் தலைவர் வுட்ரோ வில்சன்’ ‘உலக ஒற்றுமைக் கழகத்தின் தந்தை' என்னும் புகழ்ப் பெயர் பெற்றார். உலக மக்கள் ஒன்றுபடுவதற்கும் வசதி யுடன் வாழ்வதற்கும் உரிய சட்ட திட்டங்கள் பலப் பல வகுக்கப்பட்டன. பல நாடுகள் கழகத்தில் சேர்ந்தன; சில நாடுகள் சில்லாண்டு கழித்துச் சேர்ந்தன. இக்கழகம் செய்த ஆக்க வேலைகளுள் ஒரு சில வருமாறு:

1. சுவீடனுக்கும். பின்லாந்துக்கும், செர்மனிக்கும். போலந்துக்கும், கிரேக்கருக்கும்-பல்கேரியருக்கும், கொலம் பியாவிற்கும்-பெருவிற்கும் இடையே ஏற்பட்ட சச்சரவு களை-கலகங்களைத் தீர்த்துப் போர் மூளாமல் செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/264&oldid=544920" இலிருந்து மீள்விக்கப்பட்டது