பக்கம்:உலகு உய்ய.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

வள்ளுவரின் பங்கு

தமிழ் அறிஞராகிய திருவள்ளுவர் இந்தத் துறையில் தம் பங்கைச் சரியாகச் செலுத்தியுள்ளார். உலகப் பொது நூலாகிய திருக்குறளை, அவர், உலகத்தை மையமாகக் கொண்டே இயற்றியுள்ளார் என்னும் செய்தி முன்ன மேயே கூறப்பட்டுள்ளது. பெண்பாற் புலவராகிய ஒளவை யார் ஊர் ஒற்றுமை உணர்வையும் நாட்டு ஒற்றுமை உணர்வையும் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளுவரோ, உலகச் சமுதாய ஒற்றுமை உணர்வை ஊட்டியுள்ளார். அவர் பாடல்களுள், விரிவு அஞ்சி, பத்தே பாடற் செய்தி களை ஈண்டு காண்பாம்:

1. “உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார்’ (140)

பல கலைகளைக் கற்றிருப்பினும், உலகத்தோடு ஒட்டி

ஒன்றி வாழ்தலைக் கல்லாதவர்கள் அறிவில்லாதவர்களே,

2. 'உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்' (294)

ஒருவன் தன் மனம் அறியப் பொய்க்காது-வஞ்சிக்காது ஒழுகினால், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் நிலைத் திருப்பான்

3. “தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்’ (399)

தாம் பெற்று மகிழ்வதை உலகமும் பெற்று மகிழச்செய்து அது கண்டு மேலும் மகிழ்வது கற்றறிந்தார் இயல்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/271&oldid=544927" இலிருந்து மீள்விக்கப்பட்டது