பக்கம்:உலகு உய்ய.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272

9. 'நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்பு பாராட்டும் உலகு”. (994)

நயத்துடன் நன்மை புரியும் பயன் உள்ளவர்களின் உயர் பண்பை உலகம் பாராட்டும்.

10. பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்’ (996)

நற்பண்பு உடையவரைச் சார்ந்தே உலகம் நிலைத்து நடக்கிறது; அந்நிலை இல்லையேல், மண்ணுக்குள் மடிந்து மாய்ந்துபோகும். ஐயோ!

இவ்வாறு திருவள்ளுவர் திருக்குறளில் ஆங்காங்கே உலக ஒற்றுமையுணர்வை ஊட்டியிருப்ப தல்லாமல், ஒப் புரவு அறிதல்' என்னும் தனித்தலைப்பு ஒன்று இட்டு அது பற்றிப் பத்துப் பாடல்கள் பாடியுள்ளார். ஒப்புரவு' என் றால், உலக நடையினை அறிந்து ஒத்து-உதவி வாழ்தல் என்பது பொருளாகும். எனவே, உலக ஒற்றுமைக் கோட் பாட்டில் திருவள்ளுவரின் பங்கு மிகப்பெரிது.

கூட்டரசின் தீமைகள்

உலகுக்கு ஒரே கூட்டரசு ஏற்படுத்துவது இயலக் கூடியதன்று என்பார், தம் கொள்கைக்கு உரிய காரண மாகக் கூறும் தீமைகள் என்னென்னவா யிருக்கலாம் என நாம் ஆய்ந்து பார்க்கலாம்:

1. உலகம் முழுவதையும் ஒரே அரசு கட்டிக் காத்துச் சமாளிக்க முடியாது.

2. மூலைக்கு மூலை கலகங்கள் ஏற்படும்; இதைக் கவனிக்கவே சரியாயிருக்கும்; ஆட்சியை நன்கு கவனிக்க

முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/273&oldid=544929" இலிருந்து மீள்விக்கப்பட்டது