பக்கம்:உலகு உய்ய.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277

யும் உண்டு என்பதை அனைவரும் ஒத்துக் கொள்ள

வேண்டும்.

காலமும் இடமும்:

காலம், இடம் என்பன பற்றி மெய்யறிவாளர்கள் (தத்துவ வாதிகள்) பல்வேறு கருத்துக்கள் கூறியுள்ளனர். நியூட்டன், ஐன்ஸ்டைன் போன்ற அறிவியலாரும் இவை பற்றித் தம்முள் மாறுபட்டுப் பல்வேறு கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர். எளியவனாகிய என்னைப் பொறுத்த வரையிலும்; காலம்’ என ஒரு பொருளும் இடம் என ஒருபொருளும் தனியே இருப்பதாகத் தெரியவில்லை. சுற்றுச் சூழ்நிலையைக் கொண்டு, இது இந்தக்காலம்அது அந்தக் காலம் என நாமாக நடைமுறை வசதிக் காக வகுத்துக் கொள்கிறோம். கோடைக்காலம், மழைக் காலம், குளிர்காலம், பனிக்காலம் என்பன, அவ்வப்போ துள்ள சூழ்நிலையைப் பொறுத்தே கணிக்கப்படுகின்றன. இந்தியாவில் ஞாயிற்றின் தோற்ற-மறைவைக் கொண்டு நாளும், மதியின் (சந்திரனின்) இயக்கத்தைக் கொண்டு மாதமும் கணிக்கப்படுகின்றன. கிறித்து பிறந்ததிலிருந்து நூறு நூறு ஆண்டுகளை மையமாகக் கொண்டு கி.பி. முதல் நூற்றாண்டு-ஐந்தாம் நூற்றாண்டு-பத்தாம் நூற் றாண்டு-இருபதாம் நூற்றாண்டு என நாமாகக் கணித்துக் கொண்டுள்ளோம். குறிப்பிட்ட ஒவ்வொரு கால வரை யறையும், குறிப்பிட்ட அளவான இடத்துக்கு ஒன்று வீதம் நடப்பட்டுள்ள மைல் கல்’ போன்றதேயாகும்.

இடம் என்பதும் காலத்தைப் போன்றதே. இடம் என ஒன்று தனியாக இல்லை. கடல், மலை, மணல், காடு: ஆறு முதலிய இயற்கைச் சூழ்நிலைகளைக் கொண்டு தொடக்கக் காலத்தில் இடம் என ஒன்று பிரிக்கப்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகு_உய்ய.pdf/278&oldid=544934" இலிருந்து மீள்விக்கப்பட்டது